நட்சத்திர பலன்கள்: ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை #VikatanPhotoCards
இங்கிலாந்து: செல்லமாக நக்கிய வளர்ப்பு நாய்; ஒரு வாரத்தில் இறந்துபோன 83 வயது பெண்மணி; என்ன நடந்தது?
இங்கிலாந்தைச் சேர்ந்த 83 வயதான பெண்மணி ஒருவர் தனது வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் அவரின் காலை நாவினால் தீண்டியதை எடுத்து அவருக்குத் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
அந்தப் பெண்மணியின் காலில் ஏற்கனவே காயம் இருந்துள்ளது. அதே இடத்தில் நாய் அது நாவினால் நக்கியிருக்கிறது.
வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால் நாய்களின் எச்சிலில் உள்ள பாக்டீரியாக்கள் அந்தக் காயத்தில் ஊடுருவி பல்வேறு உடல் நலப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அப்படித்தான் இந்தப் பெண்மணிக்கும் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது.

காயத்தில் பரிசோதனை செய்து பார்த்ததில், பாஸ்டுரெல்லா மல்டோசிடா என்ற பாக்டீரியா கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பாக்டீரியா 50 சதவீத நாய்களின் வாயில் உள்ளது. அந்த வயதான பெண்மணிக்கு ஏற்கனவே கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதய பிரச்னைகள் இருந்தன.
நாய் நாவினால் தீண்டிய ஒரு நாள் கழித்து அவரின் உடல் நிலை மோசமடைய தொடங்கியிருக்கிறது. ஒரு வாரத்தில் அந்தப் பெண்மணி உயிரிழந்திருக்கிறார்.
ஏற்கனவே 85 வயது முதியவர் ஒருவர் தனது செல்ல நாயிடமிருந்து பாஸ்டுரெல்லா மல்டோசிடா தொற்று ஏற்பட்டு, உறுப்பு செயலிழப்பால் உயிரிழந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.