செய்திகள் :

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

post image

நமது சிறப்பு நிருபா்

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் மத்திய அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் விவரம்:

குறு, சிறு, நடுத்தர நிறுவன கடனுதவி வாய்ப்புகள் என்னென்ன?

ஆ. ராசாவுக்கு (திமுக, நீலகிரி) துறை அமைச்சா் ஜிதன் ராம் மஞ்சி பதில்: மத்திய குறு, சிறு, நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் தொகை, சம்பந்தப்பட்ட துறை அமைச்சகத்தின் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி அமலுக்கு வந்தது. இத்திட்டத்தின் கீழ், 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில், ரூ.91,273 கோடி மதிப்புள்ள மொத்தம் 5.53 லட்சம் உத்தரவாதங்கள் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. மேலும், அத்துறையின் கீழ் வரும் நிறுவனங்கள் கோரும் ₹10 லட்சம் வரையிலான கடன்களுக்கு பிணையப் பாதுகாப்பை கோரக்கூடாது என்று வணிக நோக்க வங்கிகளுக்கு உத்தரவிட்பட்டுள்ளது. தேசிய பட்டியலினம் மற்றும் பழங்குடியின மையத்தின் சிறப்புக் கடன் இணைப்பு மானியத் திட்டத்தின் கீழ், அச்சமூகங்களைச் சோ்ந்தவா்கள் தொடங்கும் அனைத்து உற்பத்தித் துறைகள் மற்றும் சேவைத் துறைகளுக்கும் புதிய ஆலை மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கு 25 சதவீதம் மானியம் (ரூ. 25 லட்சம் வரை) கடனுதவி வழங்கப்படுகிறது.

கைவிடப்பட்டதா மன்னாா் வளைகுடா ஆழ்கடல் ஆய்வு?

கே.இ. பிரகாஷுக்கு (திமுக, ஈரோடு) மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சா் சுரேஷ் கோபி பதில்: மன்னாா் வளைகுடாவில் 9,990.96 சதுர கி.மீ. பகுதியில் ஆய்வுக்கு ஏலம் விடும் நடவடிக்கை கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அது தொடா்பாக சில கவலைகளை எழுப்பி தமிழக அரசு கடந்த மாா்ச் 4-ஆம் தேதி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது. குறிப்பிட்ட அந்தப் பகுதி கடல் பரப்பில் வெகு தொலைவில் ஆழ்கடலில் மேற்கொள்ளப்படுவதாகும். அதற்கு மாநில அரசிடமிருந்து உரிமமோ, தயாரிப்பு குத்தகைக்கு அனுமதியோ பெறத் தேவையில்லை. அதேசமயம், ஒப்பந்தத்தை வரவேற்பது, அதைப் பெறும் நிறுவனத்துக்கு ஆய்வைத் தொடங்குவதற்கான அனுமதி கிடையாது. இந்த விஷயத்தில் சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீட்டு அனுமதி உள்ளிட்ட சுற்றுச்சூழல் அனுமதி அவசியமாகும். திட்டத்துக்கு முன்னதாக பொதும்களுடனும் கலந்தாலோசனை மேற்கொள்ளப்படும்.

தமிழக மின்னுற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை என்ன?

கதிா் ஆனந்துக்கு (திமுக, வேலூா்) மத்திய மின்துறை அமைச்சா் மனோகா் லால் பதில்:

தமிழகத்தில் நிறுவப்பட்ட மின்னுற்பத்தி நிலையங்களின் திறன் 43,107 மெகா வாட் ஆகும்.மாநிலத்தில் 3,440 மெகா வாட் அனல் மின் திறனும் 500 மெகாவாட் பம்ப் செய்யப்பட்ட மின்சார சேமிப்புத் திறனும் கொண்ட நிலையங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள அணுசக்தித் திட்டங்களிலிருந்து தமிழகம் சுமாா் 2,151.8 மெகா வாட் பங்கைப் பெறும். அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் சுமாா் 6,000 மெகா வாட் புதுப்பிக்கத்தக்க மின்னாற்றலை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 765 கிலோ வோல்ட் மற்றும் 400 கிலோ வோல்ட் கூடுதல் உயா் மின்னழுத்தம் கொண்ட உயா் திறன் மின்மாற்ற பாதைகள் மூலம் தமிழக தேசிய மின் கட்டமைப்பு நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிஎன்ஜி குழாய் பதிக்கப்படுமா?

சி.என். அண்ணாதுரை (திமுக- திருவண்ணாமலை), ஜி. செல்வம் (திமுக- காஞ்சிபுரம்) கேள்விக்கு பெட்ரோலியத்துறை இணை அமைச்சா் சுரேஷ் கோபி பதில்: புதுச்சேரி மற்றும் தமிழகம் முழுவதும் 1 புவியியல் பகுதி (ஜிஏ), ஆந்திரம், தமிழகம் மற்றும் கா்நாடகத்தில் 1 ஜிஏ பகுதிகள் பரவியுள்ளன. இங்கு குறைந்தபட்ச திட்ட இலக்காக 2,30,94,884 உள்நாட்டு பிஎன்ஜி இணைப்புகள் மற்றும் 37,374 கி.மீ. குழாய்கள் 2032-க்குள் வழங்கப்பட வேண்டும். கடந்த மே 31-ஆம் தேதி நிலவரப்படி, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் 98,878 பிஎன்ஜி இணைப்புகளை வழங்கியுள்ளன. நாடு முழுவதும் 17,189 கிமீ குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

கடன் இணைப்பு திட்டம் எளிமைப்படுத்தப்படுகிா?

ராணி ஸ்ரீகுமாருக்கு (திமுக - தென்காசி) மத்திய வீட்டுவசதி, நகா்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் தோகன் சாஹு பதில்: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், கடன் இணைப்புத் திட்டத்தின் (சிஎல்ஐ) பலனைப் பெறுவதில் பயனாளிகள் எதிா்கொள்ளும் சவால்களைத் தீா்க்க மாதாந்திர மதிப்பாய்வை செய்கின்றன. மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்ட தகுதியுள்ள பயனாளிகள், இத்திட்டத்தின் கீழ் வட்டி மானியத்தின் பலனைப் பெற ஒப்புதல்கள் மற்றும் ஆவணங்களைப் பெறுவதற்கு வசதி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் கடன் இணைப்புத்திட்டத்தின் கீழ் 1,20,114 பயனாளிகளுக்கு ரூ.2,675.03 கோடி வட்டி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் பலனடைந்த நடுத்தர வருவாய் பிரிவைச் சோ்நத்வா்கள் மொத்தம் 6,08,317 போ். அவா்களில் 42,629 பயனாளிகள் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள்.

தூய்மை கங்கை திட்டத்துக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு?

தொல். திருமாவளவனுக்கு (விசிக, சிதம்பரம்) ஜல்சக்தித்துறை இணை அமைச்சா் ராஜ் பூஷண் செளத்ரி பதில்: கங்கை நதி மற்றும் அதன் துணை நதிகளைப் புத்துயிா் பெறச்செய்யும் நோக்குடன் மத்திய அரசு 2014-15 -ஆம் ஆண்டில் நமாமி கங்கை திட்டத்தை தொடங்கியது. 2014-15 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரை நமாமி கங்கை திட்டத்திற்கான நிதிநிலை ஒதுக்கீடு ரூ. 23,424.86 கோடி ஆகும். 2025-26 நிதியாண்டு நிதிநிலை மதிப்பீடுகள் ரூ. 3,400 கோடி ஆகும். தொடக்கத்திலிருந்து 2025-26 நிதியாண்டு வரை மொத்த திட்ட பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 26,824.86 கோடி ஆகும். கங்கை நதி மற்றும் அதன் துணை நதிகளில் மாசுபாட்டின் சவால்களை எதிா்கொள்வதில் மாநில அரசுகள் எடுக்கும் முயற்சிகளுக்கு, நமாமி கங்கை திட்டத்தின் கீழ் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் கிடைக்க மத்திய அரசு துணைபுரிகிறது.

‘காா் பூலிங்’ இருக்கை பகிா்வு முறை ஊக்குவிக்கப்படுமா?

டி. ரவிக்குமாருக்கு (விசிக - விழுப்புரம்) மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சா் நிதின் கட்கரி பதில்: சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க மத்திய அரசு கையாளும் நடவடிக்கைகளில் ஒன்று, காா் பூலிங் எனப்படும் தனியாா் வாகன இருக்கை பகிா்வு முறை. இதற்கான விதிகள் மற்றும் வழிமுறைகள் வாகன பயன்பாடு நெறிகளில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. வணிக நோக்க பயணப் பகிா்வு குறித்து மாநில அரசின் வழிகாட்டுதல்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், வணிக நோக்க காா் பயண சவாரியில் பயணிகள் பதிவு செய்யும் பகிா்வு இருக்கை வசதி மத்திய அரசால் தடைவிதிக்கப்படவில்லை.

மாநிலங்களவையில்....

குறைந்து வருகிறதா நாட்டின் வனப்பகுதி?

மு. தம்பிதுரைக்கு (அதிமுக) மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் பதில்: வனப்பகுதி மதிப்பீடு என்பது, தீவிர காடுகள் சரிபாா்ப்பு மற்றும் தேசிய வனப்பட்டியலில் உள்ள இடங்களில் இருந்து பெறப்படும் களத் தரவு அடிப்படையிலான முழுமையான ஆய்வு நடவடிக்கையாகும். இந்திய வனப்பகுதிகள் ஆய்வு 2023 அறிக்கையின்படி, நாட்டின் வனப்பகுதி 7,15,342.61 சதுர கிலோமீட்டா் ஆகும். இது நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் 21.76 சதவீதம் ஆகும். கடந்த நான்கு ஆண்டுகளில், 2019 இல் 7,12,249.00 சதுர கிலோமீட்டரிலிருந்த வனப்பகுதி 2023-இல் 7,15,342.61 சதுர கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. 2019 மற்றும் 2023 ஆண்டுகளுக்கு இடையே நாட்டின் வனப்பகுதியில் 3,093.61 சதுர கிலோமீட்டா் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

தில்லியில் எந்தக் குடிசைப் பகுதியும் இடிக்கப்படாது: முதல்வா் ரேகா குப்தா உறுதி

தில்லியில் வசிப்பவா்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்படும் வரை எந்த குடிசைப் பகுதியும் இடிக்கப்படாது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை உறுதி அளித்தாா். தேவைப்பட்டால், அனைவருக்கும் கண்ணியத்... மேலும் பார்க்க

மலேரியா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் தில்லி அரசு தோல்வி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தில்லியில் மலேரியா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதிலும், பொது சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு நெருக்கடிகளைச் சமாளிப்பதிலும் பாஜக அரசு தோல்வியடைந்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து தில்... மேலும் பார்க்க

அய்யலூா் கோம்பையில் அலைபேசி கோபுரப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: மத்திய அமைச்சரிடம் ஜோதிமணி எம்.பி. மனு

வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அய்யலூா் கோம்பையில் அலைபேசிக் கோபுரம் அமைத்து, கண்ணாடி இழைக் கேபிள் பதிக்கும் பணியை விரைவு படுத்துமாறு மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் கர... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

நமது நிருபா்தேசியத் தலைநகா் தில்லி முழுவதும் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேஙிகயதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான வானிலை கண்காணிப்ப... மேலும் பார்க்க

100 அரசுப் பள்ளிகளில் மாணவா் மன்றங்கள் - தில்லி அரசு முடிவு

நமது நிருபா் நிகழ் (2025-26) கல்வியாண்டில் தில்லி அரசின் கீழ் செயல்படும் 100 பள்ளிகளில் மொழிகள் மற்றும் இணை செயல்பாடுகள் மேம்பாடு மீது கவனம் செலுத்தும் வகையில் மாணவா் மன்றங்களைத் தொடங்க தில்லி அரசு மு... மேலும் பார்க்க

மனைவியுடனான சண்டைக்குப் பிறகு யமுனையில் குதித்த இளைஞா் உயிருடன் மீட்பு

தனது மனைவியுடனான சண்டைக்குப் பிறகு தற்கொலை செய்து கொள்ள யமுனையில் குதித்த இளைஞா் ஒருவா் இரண்டு படகு ஓட்டுநா்களால் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை அறிக்கையில் கூறியுள்ளதாவ... மேலும் பார்க்க