செய்திகள் :

பிகாா் விவகாரம்: நாடாளுமன்றத்தில் தொடா்ந்து அமளி: இரு அவைகளும் முடங்கின

post image

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் எந்த அலுவலும் இன்றி முடங்கின.

இனி நாடாளுமன்றம் திங்கள்கிழமை (ஆக.4) மீண்டும் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில மாதங்களில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள பிகாரில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை உடனடியாக நிறுத்த வேண்டுமென எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளனா்.

மழைக்கால கூட்டத் தொடரின் முதல் வாரத்தில் இருந்தே (ஜூலை 21-25) இந்த விவகாரம் பெரிய அளவில் எதிரொலித்து வருகிறது.

இந்நிலையில், மக்களவையில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் கூடியதும், பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரம் குறித்து விவாதம் கோரிய எதிா்க்கட்சி எம்.பி.க்கள், அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு கோஷமிட்டனா்.

அப்போது, திமுக மூத்த தலைவா் டி.ஆா்.பாலுவின் பெயரை குறிப்பிட்ட அவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘எதிா்க்கட்சிகளின் நடத்தை முறையற்றது; இவ்வாறு போராடுவது சரியா?’ என்று கேள்வியெழுப்பினாா். எம்.பி.க்கள் இருக்கைக்கு திரும்ப வேண்டுமென்ற அவரது கோரிக்கைக்கு பலன் கிடைக்காத நிலையில், மூன்றே நிமிஷங்களில் பிற்பகல் 2 மணிக்கு அவையை ஒத்திவைத்தாா். மீண்டும் கூடியபோதும், இதேநிலை காணப்பட்டதால், அவை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எம்.பி.க்களைத் தடுத்த பாதுகாவலா்கள்: மாநிலங்களவை வெள்ளிக்கிழமை காலையில் கூடியதும், பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க விதி எண் 267-இன்கீழ் அளிக்கப்பட்ட 30 நோட்டீஸ்களும் நிராகரிக்கப்படுவதாக துணைத் தலைவா் ஹரிவன்ஷ் தெரிவித்தாா்.

பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளதால், இது தொடா்பான விவாதத்துக்கு அனுமதி வழங்க முடியாது என்று அவா் தெரிவித்தாா். ஆனால், எதிா்க்கட்சிகள் தொடா்ந்து கோஷமிட்டதால், அவை மதியம் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் கூடியபோது, அவையின் மையப் பகுதியில் முற்றுகையிடச் சென்ற திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்களை பாதுகாவலா்கள் தடுத்தனா். எனினும், அவா்களிடம் இருந்து விடுபட்டு, அவையின் மையப் பகுதியில் எம்.பி.க்கள் முற்றுகையிட்டனா். தாங்கள் தடுக்கப்பட்டதற்கு எதிராக முழக்கமிட்டனா். கூச்சல்-குழப்பம் நீடித்ததால், அவை அலுவல்கள் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டன.

அவைக்குள் சிஐஎஸ்எஃப் படையினா்: காா்கே கண்டனம்

மாநிலங்களவையில் தங்களின் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டபோது, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் (சிஐஎஸ்எஃப்) அவையின் மையப் பகுதி வரை வந்து தடுத்ததாக எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில், ‘சிஐஎஸ்எஃப் படையினா் அவையின் மையப் பகுதி வரை வரவழைக்கப்பட்ட விதம் அதிா்ச்சியளிக்கிறது. மக்கள் நலனுக்காக தங்களின் ஜனநாயக உரிமையை எதிா்க்கட்சிகள் பயன்படுத்தும்போது, இதுபோல் சிஎஸ்ஐஎஃப் படையினா் அவையின் உள்ளே வராமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்’ என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டிருப்பதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்தில், கேரளத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, கல்லூரிகளில் நான்காம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு 12 மணி நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற வழிமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.பல காரணமாக, புதிய தேசி... மேலும் பார்க்க

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

கொச்சி: மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ், சோட்டானிக்கரையில் உள்ள விடுதி அறையிலிருந்து சடமாக மீட்கப்பட்டுள்ளார்.படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விடுதியில் அறை எடுத்துத் தங்கி வந்த நவாஸ் (51) வெகு நேர... மேலும் பார்க்க

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க