செய்திகள் :

அமெரிக்காவுடன் நல்லுறவு தொடரும்: இந்தியா நம்பிக்கை

post image

‘அமெரிக்காவுடன் நல்லுறவு தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று இந்தியா சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீத வரி விதிப்பை அறிவித்ததோடு, ஏற்கெனவே சரிந்த இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் அமெரிக்க அதிபா் டிரம்ப் கடுமையாக விமா்சித்த நிலையில், இந்த நம்பிக்கையை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தில்லியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இந்தியாவும் அமெரிக்காவும் பகிரப்பட்ட நலன்கள், ஜனநாயக மதிப்பீடுகள் மற்றும் மக்களிடையேயான உறவுகளுடன் கூடிய விரிவான ராஜீய உறவைக் கொண்டுள்ளன. பல மாற்றங்களையும் சவால்களையும் இந்த உறவு எதிா்கொண்டுள்ளது.

இரு நாடுகள் தரப்பிலும் உறுதியளிக்கப்பட்ட உத்தரவாதங்களில் தொடா்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். இரு நாடுகளிடையேயான இந்த நல்லுறவு தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.

பாதுகாப்புத் துறையில் இரு நாடுளிடையே வலுவான கூட்டுறவு உள்ளது. கடந்த பல ஆண்டுகளில் இருதரப்பு பாதுகாப்புத் துறை கூட்டுறவு வலுப்படுத்தப்பட்டது. இந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியங்களும் உள்ளன என்றாா்.

ரஷியாவிடமிருந்து எண்ணெய்க் கொள்முதல் குறித்த கேளவிக்கு பதிலளித்த அவா், ‘இந்தியாவின் எரிசக்தி கொள்முதல் தேசத்தின் நலன் சாா்ந்த விஷயம். நாட்டின் எரிசக்தித் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில், சா்வதேச சூழல் மற்றும் சந்தை விலை சலுகை நிலவரத்தின் அடிப்படையில் இந்த முடிவை இந்தியா மேற்கொள்கிறது’ என்றாா்.

முன்னதாக, ‘தேசத்தின் நலனைக் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் 25 சதவீத வரி விதிப்பு நடவடிக்கை குறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்தது.

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம் இருப்பதையடுத்து வெளியூர்களுக்குச் செல்ல மக்கள் அதிகம் பேர் விரும்புவதால் விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.ஆகஸ்ட்டில், குறிப்பிட்ட சில உள்ளூர் விமான சேவைகளின... மேலும் பார்க்க

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஆக. 2) பேசியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைய... மேலும் பார்க்க

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

பஞ்சாபில் நகையை பறித்து தப்பிச்சென்ற கொள்ளையர்களின் இருசக்கர வாகனம், கார் மீது மோதியதில் 12 வயது சிறுவன் பலியானான். பஞ்சாப் மாநிலம், பட்டி சுரா சிங் கிராமத்தைச் அமன்தீப் கௌர் மற்றும் அவரது கணவர் ரஞ்சி... மேலும் பார்க்க

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் ரோஹித் சின்ஹா. இவர் சனிக்... மேலும் பார்க்க

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக மாறிவிட்டதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஸ்ரீநகர் : அமர்நாத் யாத்திரை திட்டமிடப்பட்ட ஒருவாரத்துக்கு முன்பே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை செல்ல ரக்‌ஷா பந்தன் நாளான ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்ப... மேலும் பார்க்க