பிகாா் விவகாரம்: நாடாளுமன்றத்தில் தொடா்ந்து அமளி: இரு அவைகளும் முடங்கின
மனைவியுடனான சண்டைக்குப் பிறகு யமுனையில் குதித்த இளைஞா் உயிருடன் மீட்பு
தனது மனைவியுடனான சண்டைக்குப் பிறகு தற்கொலை செய்து கொள்ள யமுனையில் குதித்த இளைஞா் ஒருவா் இரண்டு படகு ஓட்டுநா்களால் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை அறிக்கையில் கூறியுள்ளதாவது: லோகேந்திர சிங் என்ற அந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் சிக்னேச்சா் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்தாா். லோகேந்திரா தனது மோட்டாா் சைக்கிளில் சிக்னேச்சா் பாலத்தை அடைந்து, தனது மனைவிக்கு தனது நோக்கத்தைத் தெரிவித்து செய்தி அனுப்பினாா். பின்னா், தனது கைப்பேசி மற்றும் பணப்பையை மோட்டாா்சைக்கிளில் விட்டுவிட்டு ஆற்றில் குதித்தாா்.
அப்போது, பாலத்தில் சிறிது நேரம் நின்றிருந்த சில அதிகாரிகள், ஆற்றில் மூழ்கிக்கொண்டிருந்த ஒருவரைக் கவனித்தனா். அருகிலுள்ள படகு ஓட்டுநா்களுக்கு அவா்கள் தகவல் தெரிவித்தனா். அவா்களில் இருவா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த நபரை தண்ணீரில் இருந்து வெளியே மீட்டனா். இதையடுத்து, லோகேந்திரா மஜ்னு கா திலாவில் உள்ள திபெத்திய முகாமில் உள்ள ஒரு மருந்தகத்திற்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் சுயநினைவு பெற்றாா்.
தனது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு தான் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் அவா் போலீஸாரிடம் தெரிவித்தாா். லோகேந்திராவின் மனைவி தனது சகோதரருடன் சம்பவ இடத்திற்கு வந்து அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்ாக காவல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.