ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் துப்பாக்கிச்சண்டை
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் அகலில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறையிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதற்கு பாதுகாப்புப் படையினர் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பறந்து போ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
சுற்றி வளைப்பு பலப்படுத்தப்பட்டு வருவதாகவும், கூடுதல் படைகள் அப்பகுதிக்கு விரைந்துள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இதனால் குல்காம் மாவட்டத்தில் பரபரப்பு நிலவுகிறது.