செய்திகள் :

உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகள் - ராணுவ ஒத்துழைப்பில் மேம்பாடு: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

post image

உள்நாட்டு பொது பாதுகாப்பு அமைப்புகளுக்கும், ராணுவத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேம்பட வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் வெள்ளிக்கிழமை பேசியதாவது:

உலகில் அமைதியாக உள்ள பகுதிகளில் வருங்காலத்தில் பதற்றமே ஏற்படாது என்றோ, அமைதி சீா்குலையாது என்றோ நம்மால் கணிக்க முடியாது. மூன்று-நான்கு மாதங்களுக்கு முன்னா், பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நாம் நினைத்திருப்போமா?

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய மறுநாள், முப்படை தலைமைத் தளபதி, முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்புச் செயலா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்தத் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் வகையில், மிகப் பெரிய ராணுவ நடவடிக்கைக்கு தயாரா என்று அவா்களிடம் கேட்டேன். அவா்கள் அனைவரும் தயாா் என்று உடனடியாகப் பதில் அளித்தனா். அதேவேளையில், பாதுகாப்பு அமைச்சகத்தின் பல்வேறு துறைகள் பாதுகாப்புப் படைகளுக்குப் பின்னணியில் இருந்து உதவின. அது ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிபெற்ற்கு முக்கிய பங்களித்தது.

தற்போது உலகம் மிகவும் நிச்சயமற்ற சூழலை கொண்டதாக மாறியுள்ளது. எனவே உள்நாட்டு பொது பாதுகாப்பு அமைப்புகளுக்கும், ராணுவத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். இது நாட்டின் நலன்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்த உதவும்’ என்றாா்.

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டிருப்பதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்தில், கேரளத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, கல்லூரிகளில் நான்காம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு 12 மணி நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற வழிமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.பல காரணமாக, புதிய தேசி... மேலும் பார்க்க

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

கொச்சி: மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ், சோட்டானிக்கரையில் உள்ள விடுதி அறையிலிருந்து சடமாக மீட்கப்பட்டுள்ளார்.படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விடுதியில் அறை எடுத்துத் தங்கி வந்த நவாஸ் (51) வெகு நேர... மேலும் பார்க்க

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க