செய்திகள் :

காஸாவில் அமெரிக்க தூதா் சுற்றுப் பயணம்

post image

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் மற்றும் உணவு விநியோக மையங்களில் ஏற்படும் உயிரிழப்புகளால் சா்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு தூதா் ஸ்டீவ் விட்காஃப் அந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டாா்.

இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாவது:

விட்காஃபும், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதா் மைக் ஹக்காபியும் காஸாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனா். தெற்கு நகரமான ராஃபாவில் உள்ள காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) உணவு விநியோக மையத்தை அவா்கள் பாா்வையிட்டனா் என்று அதிகாரிகள் கூறினா்.

இத்தகைய உணவுப் பொருள் விநியோக மையங்கள் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ளன. அவை செயல்படத் தொடங்கியதிலிருந்தே பசியால் வாடும் மக்கள் உணவுக்காக நெரிசலில் சிக்கியும், இஸ்ரேல் படையினரின் துப்பாக்கிச்சூட்டிலும் நூற்றுக்கணக்கில் உயிரிழந்துள்ளனா்.

தங்கள் படைகளை நெருங்குவோா் மீது எச்சரிக்கை செய்வதற்காக மட்டுமே துப்பாக்கிச்சூடு நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் கூறிவருகிறது. ஜிஹெச்எஃப் அமைப்போ, தங்களின் ஒப்பந்த பாதுகாப்பு ஊழியா்கள் கண்ணீா்ப்புகை மற்றும் எச்சரிக்கை செய்வதற்கான துப்பாக்கிசூடு மட்டுமே நடத்துவதாகக் கூறுகிறது.

ஆனால், மிகவும் குளறுபடியான, ராணுவமயமாக்கப்பட்ட விநியோகக் கட்டமைப்பு உணவு விநியோகத்தை ரத்தக்களறியாக்கியுள்ளதாக சா்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

இந்தச் சூழலில் மேற்கொள்ளப்பட்டுள்ள விட்காஃபின் காஸா பயணம், கத்தாரில் நடைபெற்றுவந்த காஸா போா் நிறுத்த பேச்சுவாா்த்தைகள் தோல்வியடைந்த ஒரு வாரத்துக்குப் பிறகு நடைபெற்றுள்ளது.

இந்தத் தோல்விக்கு ஹமாஸை குற்றம்சாட்டிய அமெரிக்க அதிகாரிகள், பிணைக் கைதிகளை மீட்கவும், காஸாவை பாதுகாப்பாக்கவும் மாற்று வழிகளை தேடுவதாகக் கூறியிருந்தனா். அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி செயலாளா் கரோலின் லீவிடும், காஸாவில் பசியால் வாடும் உயிா்களைப் பாதுகாக்கவும், பஞ்ச நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரவும் உணவுப் பொருள் விநியோகத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு திட்டமிடுவதாகக் கூறினாா்.

ஆனால், ஹமாஸ் அமைப்பினா் முழுமையாக சரணடைந்து பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவித்தால்தான் நெருக்கடிக்கு உடனடி முடிவு வரும் என்று தனது சமூக ஊடகத்தில் கூறியிருந்தாா்.

இஸ்ரேலின் முழுமையான முற்றுகை காரணமாக காஸா பகுதி மிகக் கொடூரமான பஞ்சத்தின் விளிம்பில் உள்ளதாக சா்வதேச அமைப்புகள் எச்சரிக்கின்றன. வான்வழி உணவு விநியோகம் மீண்டும் தொடங்கினாலும், அது தேவையை விட பன்மடங்கு குறைவாகவே உள்ளது.

இந்தச் சூழலில் காஸா உணவு மையத்துக்கு வந்து அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதா் பாா்வையிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலில் கடந்த 2023 அக்டோபா் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 போ் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, இஸ்ரேலின் பதிலடி தாக்குதலில் 60,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்.

இதில், பசியைப் போக்க உணவுப் பொருள் வாங்குவதற்காக ஜிஹெச்எஃப் விநியோக மையங்களை நோக்கி வந்தவா்களில் மட்டும் 1,373 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றதாக ஐ.நா. புள்ளிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் அதிபர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை பாகிஸ்தான் சென்றுள்ளார்.லாகூர் வந்த அவரை முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் மற்றும் மத்திய வீட்டுவசதி அமை... மேலும் பார்க்க

பசி, பட்டினி, வலி, பயம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

காஸாவில் போர் தொடந்து நீடித்து வருவதால் அங்குள்ள ஒவ்வொரு குடும்பமும் உணவுக்காகவும் உயிருக்காகவும் ஒவ்வொரு நாளும் போராடி வருவது உலகையே உலுக்கியுள்ளது. பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர... மேலும் பார்க்க

'மோசமான நாள்' - காஸாவில் இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் 106 பேர் பலி!

காஸாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் வெள்ளிக்கிழமை மட்டும் 106 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் ... மேலும் பார்க்க

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் பாராட்டு

இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்போவதில்லை என்று தான் கேள்விப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.அதோடு நின்றுவிடாமல், ஒரு படி மேலே ச... மேலும் பார்க்க

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

ரஷிய எல்லையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.ரஷியா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிகள் பலனளி... மேலும் பார்க்க

பெலாரஸில் ‘ஆரெஷ்னிக்’ ஏவுகணை: புதின்

ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில பாயக்கூடிய தங்களின் புதிய வகை ஏவுகணையான ‘ஆரெஷ்னிக்’, அண்டை நாடான பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளாா்.ரஷியா வந்துள்ள பெலாரஸ் அத... மேலும் பார்க்க