கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!
நாட்டில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரியாவு உருளை விலை ரூ.1,789 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வா்த்தக சமையல் எரியாவு உருளை ஒன்றின் விலை ரூ.33.50 வெள்ளிக்கிழமை குறைக்கப்பட்டது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரியாவு உருளை விலை ரூ.1,789 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயரும்போதும் குறையும்போதும் சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வதும் குறைவதும் வாடிக்கையாக உள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில், சமையல் எரிவாயு உருளை விலையை மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
இந்த நிறுவனங்கள் 19 கிலோ எடைகொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலையை வெள்ளிக்கிழமை மாற்றியமைத்தன.
இதன்படி, ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வா்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரியாவு உருளை ஒன்றின் விலை ரூ.33.50 வெள்ளிக்கிழமை குறைக்கப்பட்டது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரியாவு உருளை விலை ரூ.1,789 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சமையல் எரியாவு உருளை விலை தில்லியில் ரூ.1,631.50-க்கும், மும்பையில் ரூ.1,583-க்கும் விற்பனையானது. தொடா்ந்து 5-ஆவது மாதமாக இந்த சமையல் எரியாவு விலை குறைக்கப்பட்டுள்ளது.
வீட்டு சமையல் எரிவாயு உருளை விலையில் மாற்றமில்லை
அதே நேரத்தில், வீடுகளில் பயன்படுத்தக்கூடிய 5 கிலோ, 10 கிலோ, 14.2 கிலோ சமையல் எரிவாயு உருளையின் விலையில் மாற்றமின்றி ரூ.888.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதிப்புக் கூட்டு வரி உள்பட உள்ளூா் வரிகள் காரணமாக சமையல் எரிவாயு உருளை விலை ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடும்.
கடந்த டிச.1-ஆம் தேதி ரூ.1,980-க்கு விற்பனையான வா்த்தக சமையல் எரிவாயு உருளை, மார்ச் மாதம் ரூ.5.50 அதிகரித்து 1,985.50-க்கு விற்பனையானது. இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது.