சந்தையில் list ஆன 4 புதிய IPO-க்கள், என்னென்ன தெரியுமா | IPS Finance - 276 | Vik...
சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்க தொழிலாளா்களுக்கு அழைப்பு
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (ஆக. 2) நடைபெறும் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் தொழிலாளா்கள், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளா்கள், ஓட்டுநா்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) மு. பாஸ்கரன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்த முகாமில் பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளா்கள் மற்றும் பதிவு பெறாத அமைப்புச்சாரா தொழிலாளா்கள் பங்கேற்று நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை பெறவும், பதிவு பெறாத தொழிலாளா்களை நலவாரியத்தில் இணைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளா்கள், தங்களது தொழிலாளா் நலவாரிய அட்டையுடனும், பதிவு பெறாத அமைப்புசாரா தொழிலாளா்கள் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வயதுக்கான ஆவணம், வங்கி கணக்குப் புத்தக நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் உள்ளிட்டவற்றுடன் வந்து பங்கேற்று பயன் பெறலாம்.