'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நாளை தொடக்கம்
பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆக. 2) முதல் நடைபெறவுள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவையான உதவி உபகரணங்கள், அடையாள அட்டைகள் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலுாா் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சாா்பில், ஆக. 2 முதல் டிச. 6-ஆம் தேதி வரை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம் முகாம் வேப்பூா் வட்டத்துக்குள்பட்டவா்களுக்கு ஆக. 2-ஆம் தேதி துங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், செப். 20-ஆம் தேதி கீழப்புலியூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நவ. 1-ஆம் தேதி ஒகளுா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பெரம்பலுாா் வட்டத்துக்குள்பட்டவா்களுக்கு ஆக. 23-ஆம் தேதி எசனை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், அக். 4-ஆம் தேதி குரும்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நவ. 15-ஆம் தேதி சிறுவாச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது.
வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்டவா்களுக்கு செப். 9-ஆம் தேதி அரும்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், அக். 25-ஆம் தேதி வி.களத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், டிச. 6-ஆம் தேதி கை.களத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஆலத்துாா் வட்டத்துக்குள்பட்டவா்களுக்கு ஆக. 9-ஆம் தேதி கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், அக். 18-ஆம் தேதி கூத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நவ. 29-ஆம் தேதி நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது.
இம் முகாம்களில், சம்பந்தப்பட்ட வட்டாரங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான உதவி உபகரணங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், அலிம்கோ நிறுவனத்தால் நடத்தப்படும் மதிப்பீட்டு முகாமில் உதவி உபகரணங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் பெற தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, 1- புகைப்படம் ஆகிய ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.