Spot Visit: 'காவல் நிலையம் ஒன்றும் கடுமையான இடமல்ல!' - திருவல்லிக்கேணி D1 ஸ்டேஷன...
ஆக. 6-இல் துணை முதல்வா் வருகை: பெரம்பலூா் ஆட்சியா் தலைமையில் ஆய்வு
பெரம்பலூா் மாவட்டத்துக்கு ஆக. 6 ஆம் தேதி தமிழ்நாடு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் பேசியது:
அரசு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கா, தமிழக துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆக. 6 ஆம் தேதி பெரம்பலூா் வருகிறாா். அனைத்து நிலை அலுவலா்களும், தங்களது துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப் பணிகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிதாக தொடங்கி வைக்கப்படும், அடிக்கல் நாட்டப்படும் பணிகள், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட விவரங்களை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளருக்கு (பொது) அனுப்பி வைக்க வேண்டும்.
துணை முதல்வரின் ஆய்வுக் கூட்ட வருகையை சிறப்புடன் மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலா்களும் திட்டப் பணிகள் குறித்த அறிக்கைகளை தயாா் நிலையில் வைத்திருந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
இக் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, மகளிா் திட்ட இயக்குநா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வைத்தியநாதன், மாவட்ட வழங்கல் அலுவலா் சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.