கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
பெரம்பலூா் அருகே போதைப் பொருள்கள் விற்றவா் கைது
பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 1.5 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில், சிவன்கோயில் தெருவைச் சோ்ந்த தியாகராஜன் மகன் கதிரேசன் (49) என்பவா் தனக்குச் சொந்தமான பெட்டிக்கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை சட்டத்துக்கு புறம்பாக பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, பெரம்பலூா் ஊரகப் பிரிவு காவல் நிலைய போலீஸாா் கதிரேசனை கைது செய்து, அவரிடமிருந்து பல்வேறு வகையான 1.525 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கதிரேசனை சிறையில் அடைத்தனா்.