Anirudh: "வி.டியின் அந்த மனசு..., கிங்டம் ஒரு மைல்கல்!" - இசை வெளியீட்டு விழாவில...
செங்குணத்தில் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்
பெரம்பலூா் அருகே செங்குணம் கிராமத்திலுள்ள மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 13-ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடா்ந்து, 20-ஆம் தேதி காப்புக் கட்டுதலுதன் விழா தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் இரவு மயில், சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.
தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா். மாலையில், பொங்கலிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
மகா மாரியம்மனுக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், திரவியம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் திருத்தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், கிராம முக்கியஸ்தா்கள் மற்றும் கிராம மக்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா். தேரோடும் வீதிகள் வழியாக இழுத்துச் செல்லப்பட்ட திருத்தோ் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. இதில், பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து அம்மனை தரிசனம் செய்தனா்.