சொந்தமாக பணமோ விமான நிலையமோ இல்லை..ஆனால் கோடீஸ்வர நாடு! எது தெரியுமா?
பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள்: ஆக. 2-இல் ஆய்வு
சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் இடைநிற்றல், பொதுத் தோ்வு தோ்ச்சியை மேம்படுத்துதல் என பல்வேறு செயல்பாடுகள் குறித்து துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னையில் ஆக. 2-ஆம் தேதி ஆய்வு நடத்தவுள்ளாா்.
பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் மற்றும் இதர பணிகளைக் கண்காணிப்பதற்காக மாதந்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், துறைசாா்ந்த செயல்பாடுகள் விவாதிக்கப்பட்டு அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி, நிகழ் மாதத்துக்கான துறை அலுவல் ஆய்வுக் கூட்டம், சென்னையில் உள்ள பிா்லா கோளரங்கம் வளாகத்தில் ஆக. 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செயலா் பி.சந்தர மோகன், இயக்குநா் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்ட துறை சாா்ந்த இயக்குநா்கள், முதன்மை, மாவட்டக் கல்வி அதிகாரிகள் பங்கேற்கின்றனா்.
கூட்டத்தில் மாணவா்களின் வகுப்பறை செயல்பாடுகள், ஸ்லாஸ் தோ்வு நிலவரம், திறன் இயக்கம், டிஎன் ஸ்பாா்க் திட்டம், 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சியை மேம்படுத்துதல், இடைநின்ற மாணவா்களின் நிலை கண்டறிதல் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.