5-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா? இல்லையா? - பயிற்சியாளர் பதில்
சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்.. 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவில், தன்னுடைய யூடியூப் சேனல் செயல்பட சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தடையாக இருப்பதாக கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி, ன்னை காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பி. வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சவுக்கு சங்கருக்கு எதிராக 13 வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளன. 24 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்களில் நிலுவையிவ் உள்ள 13 வழக்குகளை 4 மாதத்துக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், சவுக்கு சங்கர் கோரிக்கை டிஜிபியால் ஏற்கெனவே பரீசிலீத்து முடித்து வைக்கப்பட்டுள்ளதால் சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.