Doctor Vikatan: சளி, மூச்சுத்திணறலுக்கு தைலம், கற்பூரம் தடவுவது உயிரிழப்பை ஏற்பட...
கிங்டம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது... மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!
நடிகர் விஜய் தேவரகொண்டா கிங்டம் படம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது எனக் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். கடைசியாக, இவர் கல்கி 2898 ஏடி எனும் திரைப்படத்தில் அர்ஜுனர் பாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது, நடிகர் விஜய் தேவரகொண்டா ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் விஜய் தேவரகொண்டா கூறியதாவது:
கிங்டம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது. ஆனால், இந்தப் படம் இயக்குநர் கௌதம் தின்னனுரியின் அடையாளத்தில் இருக்கும். இந்தப் படம் எண்டர்டெயினராக இருக்காது. ஆனால், ஆக்ஷன் டிராமாவாக இருக்கும் என்றார்.
அனிருத் இசையில் முதல்முறையாக நடித்துள்ளது மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசினார்.
நடிகர் யஷ் நடித்த கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.