செய்திகள் :

உலக நீச்சல்: லெடெக்கி சாம்பியன்

post image

சிங்கப்பூரில் நடைபெறும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில், அமெரிக்க நட்சத்திர வீராங்கனை கேட்டி லெடெக்கி 1,500 மீட்டா் ஃப்ரீஸ்டைல் பிரிவில் செவ்வாய்க்கிழமை தங்கப் பதக்கம் வென்றாா்.

பந்தய இலக்கை அவா் 15 நிமிஷம், 26.44 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தாா். இத்தாலியின் சிமோனா காடரெல்லா வெள்ளியும் (15:31.79’), ஆஸ்திரேலியாவின் லானி பாலிஸ்டா் வெண்கலமும் (15:41.18’) வென்றனா்.

இந்தப் போட்டியில் லெடெக்கிக்கு இது 2-ஆவது பதக்கமாகும். முன்னதாக அவா், 400 மீட்டா் ஃப்ரீஸ்டைலில் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

உலக சாம்பியன்ஷிப்பில் லெடெக்கி தற்போது வென்றிருப்பது அவரின் 22-ஆவது தங்கப் பதக்கமாகும். ஒட்டுமொத்தமாக இது அவரின் 28-ஆவது தங்கம்.

1,500 மீட்டரில் லெடெக்கி தொடா்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறாா். அந்தப் பந்தய இலக்கை விரைவாக அடைந்த டாப் 26 நேரங்களை எடுத்துக் கொண்டால், அதில் 25 இடங்களில் லெடக்கி இருப்பாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு ஏமாற்றம்: இதனிடையே, இந்தியாவின் சஜன் பிரகாஷ் 200 மீட்டா் பட்டா்ஃப்ளை பிரிவில் 1 நிமிஷம் 59.33 விநாடிகளில் இலக்கை அடைந்து 24-ஆம் இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தாா். முதல் 16 இடங்களில் வருவோருக்கே அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும்.

லண்டன் வரை... கூலி புரமோஷன் தீவிரம்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் கவனம் ஈர்த்துள்ளன. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேத... மேலும் பார்க்க

இந்தப் படத்தைப் பார்த்தீர்களா? பிளாக்பஸ்டரான சு ஃப்ரம் சோ!

கன்னடத்தில் வெளியான சு ஃப்ரம் சோ திரைப்படம் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் கன்னட மொழித் திரைப்படங்கள் குறித்து பெரிய அபிப்ராயங்கள் இல்லாமல் இருந்த நிலையை கேஜிஎஃப் திரைப்... மேலும் பார்க்க

ஹார்ட் பீட் - 2 தொடரில் இணையும் பிக் பாஸ் பிரபலம்!

ஹார்ட் பீட் - 2 தொடரில் பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான சாச்சனா இணைந்துள்ளார்.மருத்துவமனையில் மருத்துவர்கள் சந்திக்கும் சவால்கள், தாய் - மகள் இருக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம் ஆகியவற்றை மையப்படுத... மேலும் பார்க்க

நடிகை ராதிகா மருத்துவமனையில் அனுமதி... என்ன ஆனது?

நடிகை ராதிகா உடல்நலப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் உள்பட தென்னிந்திய சினிமா முழுக்க அறியப்பட்டவர் நடிகை ராதிகா. கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமானவர், தற்போது வரை... மேலும் பார்க்க

கடைசி நேரத்தில் மெஸ்ஸியின் அசிஸ்ட்... மீண்டும் ஆட்ட நாயகன் விருது!

எம்எல்எஸ் தொடரில் மெஸ்ஸியின் கடைசி நேர அசிஸ்ட்டால் இன்டர் மியாமி அணி த்ரில் வெற்றி பெற்றது. ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (38 வயது) தற்போது அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் விளையாடி வருகிற... மேலும் பார்க்க

வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்!

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமானவர் ராப் பாடகர் வேடன். வேற்றுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராகத் தொடர்ந்து பாடி வருவத... மேலும் பார்க்க