வெள்ளத்தில் மிதக்கும் பெய்ஜிங்: 44 பேர் பலி!
சீன தலைநகர் பெய்ஜிங்கில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. 9 பேர் காணாமல் போயுள்ளனர்.
பெய்ஜிங்கில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கடுமையான மழையால் சாலைகள் சேதமடைந்தன, மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெய்ஜிங்கில் அதிகாரிகள் முழுமையான பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.