செய்திகள் :

நடிகை ராதிகா மருத்துவமனையில் அனுமதி... என்ன ஆனது?

post image

நடிகை ராதிகா உடல்நலப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் உள்பட தென்னிந்திய சினிமா முழுக்க அறியப்பட்டவர் நடிகை ராதிகா. கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமானவர், தற்போது வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1980-களில் முன்னணி கதாநாயகியாகவும், பின்னர் குணச்சித்திர வேடங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றவர்.

தற்போது, பிரபல நாயகர்களின் தாயாக நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை ராதிகா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இன்னும் 4 நாள்களில் ராதிகா வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்!

actor radhika sarathkumar admitted in hospital

தடுமாறும் இந்தியா; தோள் கொடுக்கும் கருண் நாயா்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்துள்ளது.101 ரன்களுக்கே இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், மிடில் ஆ... மேலும் பார்க்க

புலவயோ டெஸ்ட்: நியூஸிலாந்து 307

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 96.1 ஓவா்களில் 307 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.முன்னதாக, புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே தனது ... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.3 பிஎச்கே ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான 3பிஎச்கே திரைப்படத்தில் சித்தார்த், சரத் குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளி... மேலும் பார்க்க