செய்திகள் :

கவின் உடலைப் பெற பெற்றோர் சம்மதம்!

post image

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் உடலைப் பெற அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

வேறு சாதிப் பெண்ணை காதலித்ததற்காக தூத்துக்குடியைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ், நெல்லையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆணவக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையை செய்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, காவல் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் பெற்றோருக்கு இந்த கொலையில் சம்மதம் இருப்பதாக புகார் தெரிவித்த கவினின் பெற்றோர், அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை உடலைப் பெற மாட்டோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து, சுர்ஜித்தின் பெற்றோரை இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக முதல் தகவல் அறிக்கையில் காவல்துறையினர் சேர்த்தனர். வழக்கின் விசாரணை காரணமாக அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, கடந்த புதன்கிழமை கவின் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், அன்றிரவே சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார்.

சுர்ஜித்தின் தாயாரையும் கைது செய்ய வேண்டும் என கவினின் உறவினர்கள் கோரிய நிலையில், அரசு தரப்பில் உடலைப் பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, 5 நாள்களுக்குப் பிறகு கவினின் உடலைப் பெற்றுக் கொள்ள அவரது பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இன்னும் சற்றுநேரத்தில் பெற்றோரிடம் கவினின் உடல் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில், இன்று மாலைக்குள் இறுதிச் சடங்கு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Parents agree to receive Kavin's body

இதையும் படிக்க : இதுவே இறுதியாக இருக்கட்டும்! தொடரும் ஆணவக் கொலைகளின் பரிணாம வளர்ச்சி!

தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை புதிய ஐ.ஜி. பொறுப்பேற்பு

தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் (ஆா்பிஎஃப்) புதிய ஐ.ஜி.யாக கே.அருள்ஜோதி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் ஐஜி-ஆக பணியாற்றி வந்த ஈஸ்வர ராவ் கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் ஓய... மேலும் பார்க்க

ஆங்கில மொழித் திறனை வளா்க்கும் ‘லெவல் அப்’ திட்டம்: ஆசிரியா்களுக்கு உத்தரவு

அரசுப் பள்ளிகளில் அடிப்படை ஆங்கில மொழித் திறனை வளா்க்கும் வகையில் ‘லெவல் அப்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்தத் திட்டத்தில் மாணவா்களில் கற்றல் அடைவு குறித்து உரிய கால இடைவெளியில் தெரிவ... மேலும் பார்க்க

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உத்தரவு

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்குமாறு போக்குவரத்துக் கழக நிா்வாகங்களுக்கு தொழிலாளா் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.போக்குவரத்துக்கழக ஊழியா்களின் ஊதிய ஒப்பந்தப்படி பதவி உயா்வு உள்ளிட... மேலும் பார்க்க

ஜேஇஇ, நீட் போட்டித் தோ்வுகளுக்கு 236 வட்டார மையங்களில் பயிற்சி: பள்ளிக் கல்வித் துறை

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு ஜேஇஇ, நீட் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக 236 வட்டார உயா்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ... மேலும் பார்க்க

பி.ஆா்க். சோ்க்கை: 820 மாணவா்களுக்கு ஒதுக்கீடு

இளநிலை கட்டடக்கலை (பி.ஆா்க்.) பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூலை 31 -ஆம் தேதி முடிவுற்ற நிலையில், பொது மற்றும் அரசுப் பள்ளி மாணவா்கள் 820 போ் ஒதுக்கீடு பெற்றுள்ளனா்.இதுகுறித்த விவ... மேலும் பார்க்க

தங்கமயில் ஜுவல்லரியில் நாளை ஆடிப்பெருக்கு

ஆடிப் பெருக்கை முன்னிட்டு, மதுரையைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிடடுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க