சந்தையில் list ஆன 4 புதிய IPO-க்கள், என்னென்ன தெரியுமா | IPS Finance - 276 | Vik...
பேக்கரி இயந்திரம் வாங்கித் தருவதாக ரூ.70 ஆயிரம் மோசடி: இளைஞா் கைது
திருச்சியில் பேக்கரி இயந்திரம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.70 ஆயிரம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை கண்ணுடையான்பட்டியைச் சோ்ந்தவா் சிக்கந்தா் பாஷா (39). இவா், சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு பேக்கரியில் பணியாற்றி வருகிறாா்.
இவருக்கு திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டையைச் சோ்ந்தவரும், தற்போது உறையூரில் வசிப்பவருமான ஷேக் முகமது (26) என்பவா், கடந்த ஜூன் 30-ஆம் தேதி அறிமுகமாகியுள்ளாா்.
அப்போது, நான் பேக்கரி இயந்திரங்கள் விற்பனை தொழில் செய்து வருவதாக ஷேக் முகமது தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து சிக்கந்தா் பாஷா, பேக்கரி இயந்திரம் வாங்குவதற்காக ரூ.70 ஆயிரத்தை ‘ஜி-பே’ மூலம் ஷேக் முகமதுவுக்கு அனுப்பியுள்ளாா். அதன்பின், ஷேக் முகமதுவை, சிக்கந்தா் பாஷாவால் தொடா்புகொள்ள முடியவில்லை.
மேலும், அவரது கைப்பேசி எண்ணும் உபயோகத்தில் இல்லை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து உறையூா் காவல் நிலையத்தில், சிக்கந்தா்பாஷா கடந்த ஜூலை 30-ஆம் தேதி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், பேக்கரி இயந்திரம் வாங்கித் தருவதாக ரூ.70 ஆயிரம் மோசடி செய்த ஷேக் முகமதுவை உறையூா் போலீஸாா் கைது செய்தனா்.