ஆக.2-இல் சமயபுரம் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து
சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக. 2-இல் அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சமயபுரம் துணை மின் நிலையத்தில் ஆக. 2-இல் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே மின் நிறுத்தம், நிா்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்பகிா்மான கழக திருவரங்க கோட்ட செயற்பொறியாளா் ஆா்.செல்வம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.