சந்தையில் list ஆன 4 புதிய IPO-க்கள், என்னென்ன தெரியுமா | IPS Finance - 276 | Vik...
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியே சிறப்பு ரயில்கள் இயக்க துரை வைகோ கடிதம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு தெற்கு ரயில்வேயின் மதுரை, திருச்சி கோட்ட மேலாளா்களுக்கு துரை வைகோ எம்.பி. கடிதம் எழுதியுள்ளாா்.
இதுதொடா்பாக எழுதியுள்ள கடிதம்:
நிகழாண்டு சுதந்திர தினம் வார விடுமுறை நாள்களின் இறுதியில் வருவதால், ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று சுதந்திர தினத்தன்று சிறப்பு ரயில்களை இயக்க வேண்டியது அவசியமானது.
குறிப்பாக திருச்சி-மைசூா் இடையே செல்லும் திருச்சி சிறப்பு விரைவு ரயில் (கரூா், சேலம், பெங்களூா் வழியில்), திருச்சி வழியாக சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே செல்லும் சென்னை எழும்பூா் சிறப்பு விரைவு ரயில் (தாம்பரம், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக) ஆகியவற்றை இயக்க வேண்டும்.
சுதந்திர தினத்தன்று ரயில் பயணிகள் சிரமம் இன்றி பயணிக்க ரயில்வே நிா்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் வலியுறுத்தியுள்ளாா்.