செய்திகள் :

அமெரிக்க வரி விதிப்பின் தாக்கம்: பங்குச்சந்தை சரிவுடன் முடிவு!

post image

நமது நிருபா்

இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிா்மறையாக இருந்தன. இந்நிலையில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) முதல் இந்தியாவில் இருந்து வரும் அனைத்துப் பொருள்களுக்கும் 25 சதவீவீத வரி விதிப்பதாகவும் ரஷிய கச்சா எண்ணெய் மற்றும் ராணுவ உபகரணங்களை வாங்குவதற்கு குறிப்பிடப்படாத அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்ததன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்தது. குறிப்பாக எஃப்எம்சிஜி பங்குகளுக்கு மட்டும் ஓரளவு ஆதரவு கிடைத்த நிலையில், வங்கிகள், நிதிநிறுவனங்கள் ஆட்டோ, ஆயில் அண்ட் காஸ், டெலிகாம் உள்பட அனைத்துத் துறை பங்குகளும் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.53 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.449.72 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.850.04 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,829.10 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் 786.36 புள்ளிகள் இழப்புடன் 80,695.50-இல் தொடங்கி அதற்கு கீழே செல்லவில்லை. பின்னா், அதிகபட்சமாக 81,803.27 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 296.28 புள்ளிகள் (0.36 சதவீதம்) இழப்புடன் 81,185.58-இல் நிறைடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,153 பங்குகளில் 1,602 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,416 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 135 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

22 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் டாடாஸ்டீல், சன்பாா்மா, அதானிபோா்ட்ஸ், ரிலையன்ஸ், என்டிபிசி, ஏசியன்பெயிண்ட் உள்பட 22 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதேசமயம், ஹிந்துஸ்தான் யுனிலீவா், எடா்னல், ஐடிசி, கோட்டக்பேங்க், பவா்கிரிட், டெக் மஹிந்திரா, மாருதி, ஐசிஐசிஐ பேங்க் ஆகிய 8 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 87 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 86.70 புள்ளிகள் (0.35 சதவீதம்) இழப்புடன் 24,768.35-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 14 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும் 36 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. பேங்க் நிஃப்டி 188.75 புள்ளிகள் (0.34 சதவீதம்) இழப்புடன் 55,961.95-இல் நிறைவடைந்தது.

ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

புதுதில்லி: உள்நாட்டு வருவாய் அதிகரித்ததன் காரணமாக ஜூலை மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 7.5 சதவிகிதம் அதிகரித்து சுமார் ரூ.1.96 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.2024 ஜூலையில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வ... மேலும் பார்க்க

பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் பங்குகள் 18% சரிவு!

புதுதில்லி: பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிரிஷ் கௌஸ்கி தனது ராஜினாமாவை அறிவித்ததையடுத்து நிறுவனத்தின் பங்குகள் 18% சரிந்தன.பிஎஸ்இ-யில் அதன் பங்கு 18.06 சத... மேலும் பார்க்க

டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!

புதுதில்லி: புதுப்பிக்கத்தக்க மற்றும் பரிமாற்றம் மற்றும் விநியோக வணிகத்திலிருந்து அதிக வருவாய் கிடைத்ததன் காரணமாக, ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 6%-க்கும் மேலாக உயர்ந்து ரூ.1,262... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவடைந்தது.இந்திய ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா 25% வரி விதிப்பால், ரூபாய் மதிப்பு குறைவது குறித்த கவலை அதிகரித்த... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: கரடியின் பிடியில் இந்திய பங்குச் சந்தை!

மும்பை: வரி விதிப்பு தொடர்பான கவலைகள் மற்றும் தொடர்ந்து வெளியேறும் அந்நிய நிதி ஆகியவற்றால் இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்து முடிந்தன.தொடக்க வர்த்தகத்தில், 30 ... மேலும் பார்க்க

ஐபோன் 16இ மாடலுக்கு ரூ. 11,000 ஆஃபர்! எப்படி?

அமேசானில் ஆப்பிள் ஐபோன் 16இ மாடல் போனின் விலை ரூ. 11,000 குறைவான தள்ளுபடியில் வாங்கலாம். அமேசானின் கிரேட் ஃப்ரீடம் விற்பனை அறிவிப்பு வெளியாகி அமேசானில் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட மின்னணு பொருள்களுக்கு ப... மேலும் பார்க்க