செய்திகள் :

லண்டன் வரை... கூலி புரமோஷன் தீவிரம்!

post image

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் கவனம் ஈர்த்துள்ளன.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தின் டிரைலர் ஆக. 2 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் அன்றிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துவிடும் என்பதால் பல திரையரங்க உரிமையாளர்கள் படத்தை வெளியிட முனைப்பு காட்டியுள்ளனர்.

கூலி திரைப்படம் 2.50 மணி நேரம் கால அளவு கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சண்டைக் காட்சிகள் இருப்பதால், படத்திற்கு யு / ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், படத்திற்கான புரமோஷன்களை வித்தியாசமான முறையில் தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, லண்டனில் சில பெண்கள் கூலியில் இடம்பெற்ற சிக்குது பாடலுக்கு நடனமாடிய விடியோ கவனம் ஈர்த்துள்ளது.

மேலும், இந்தியா முழுவதும் அமேசான் தளத்தில் பொருள்களை வாங்குபவர்களுக்கு கூலி படத்தைக் குறிப்பிட்ட பெட்டிகளில் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த வகையில் மார்கெட்டிங் செய்யும் முதல் இந்தியப் படம் கூலிதானாம்!

இதையும் படிக்க: இந்தப் படத்தைப் பார்த்தீர்களா? பிளாக்பஸ்டரான சு ஃப்ரம் சோ!

ஓடிடியில் வெளியானது 3 பிஎச்கே!

சித்தார்த் நடிப்பில் வெளியான 3 பிஎச்கே திரைப்படத்தின் ஓடிடியில் வெளியாகியுள்ளது.நடிகர் சித்தார்த்தின் 40-வது படமாக உருவான 3பிஎச்கே திரைப்படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியிருந்தார்.இதில் சரத் குமார்,... மேலும் பார்க்க

தடுமாறும் இந்தியா; தோள் கொடுக்கும் கருண் நாயா்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்துள்ளது.101 ரன்களுக்கே இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், மிடில் ஆ... மேலும் பார்க்க

புலவயோ டெஸ்ட்: நியூஸிலாந்து 307

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 96.1 ஓவா்களில் 307 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.முன்னதாக, புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே தனது ... மேலும் பார்க்க