செய்திகள் :

"நானும் கவினும் உண்மையா காதலிச்சோம்; தவறா பேசாதீங்க" - நடந்ததை விவரிக்கும் கவின் காதலி

post image

திருநெல்வேலியில் பட்டியலினத்தைச் சேர்ந்த கவின் என்பவரை, காவல்துறை அதிகாரிகளான சரவணன் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் மகனும். கவினின் காதலியின் சகோதரருமான சுர்ஜித் ஜூலை 27-ம் தேதி கொடூரமாக ஆணவக்கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது.

இந்த விவகாரத்தில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆணவக்கொலைக்கெதிராக தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

இந்தநிலையில், கவினின் காதலி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

கவின் குமார்
கவின் குமார்

அந்த வீடியோவில், "எனக்கும் கவினுக்கும் என்ன இருந்தது என்று எங்கள் இருவருக்கு மட்டும்தான் தெரியும். எங்கள் ரிலேஷன்ஷிப் பற்றி யாரும் தவறாகப் பேச வேண்டாம்.

உண்மை தெரியாமல் யாரும் எதுவும் பேச வேண்டாம். எங்கள் அப்பா அம்மாவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. அவர்களை விட்டு விடுங்கள். இந்த சூழ்நிலையில் எல்லோரும் அவரவருக்கு என்ன தெரியுமோ அதை பேசிவிட்டீர்கள்.

நானும் கவினும் உண்மையாக காதலித்தோம். நாங்கள் செட்டிலாக கொஞ்சம் டைம் தேவைப்பட்டது.

மே 30-ம் தேதி சுர்ஜித்தும் கவினும் பேசிக் கொண்டார்கள். அப்போது சுர்ஜித் அப்பாவிடம் கூறிவிட்டான். அப்பா என்னிடம் கேட்டபோது நான் காதலிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன்.

ஏனெனில் கவின் என்னிடம், இன்னும் ஒரு ஆறு மாதம் கழித்து சொல் என்று டைம் கேட்டிருந்தான்.

அதனால அப்பா கிட்ட நான் சொல்லல. அதுக்குள்ள இப்போ இப்படி ஆயிடுச்சு.

ரெண்டு பேருக்குள்ள என்ன உரையாடல் நடந்தது என்று தெளிவாகத் தெரியாது.

கவினின் காதலி
கவினின் காதலி

சுர்ஜித் கவினுக்கு போன் பண்ணி, `பொண்ணு கேக்க வாங்க, அப்பதான் என்னோட ப்ரொவெஷன் நான் பார்க்க முடியும்' என்று சொன்னான். அது எனக்கு கண்டிப்பா தெரியும்.

27-ம் தேதி கவின் வருகிறான் என்று எனக்கு தெரியாது. 28-ம் தேதி ஈவினிங் தான் அவங்கள நான் வர சொல்லி இருந்தேன். மதியம் (27-ம் தேதி) வந்தப்போ தான் எனக்கு தெரியும் வந்திருக்காங்கன்னு.

நேரா அவங்கள நான் கூட்டிட்டு போயிட்டேன். அன்னைக்கு கவின் அம்மா, மாமா கிட்டதான் நான் பேசினேன்.

அப்படியே கவின் வெளியே போயிட்டான். அவங்களோட அம்மாவும் மாமா கிளம்புறப்பதான் கவின் எங்கே என்று நாங்கள் யோசித்தோம். அவங்க அம்மா கால் பண்ணி கிடைக்கல, நானும் கால் பண்ணி எடுக்கல.

அவங்க அம்மா பசிக்குதுன்னு சொன்னாங்க அதனால சாப்பிட சொல்லி இருந்தேன். அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு.

இதில் யாரும் தேவையில்லாமல் வதந்திகளை கிளப்ப வேண்டாம். உங்களுக்கு தோணறது எல்லாத்தையும் நீங்க பேசாதீங்க. எங்க அப்பா அம்மாக்கு எதுவும் தெரியாது. நீங்க இதை விட்ருங்க" என்று கூறியிருக்கிறார்.

பழங்குடி லாக்அப் மரணம்: உடுமலை வனச்சரக அலுவலகத்தில் நீதிபதி ஆய்வு - நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேல்குருமலை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45). முதுவர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாரிமுத்த... மேலும் பார்க்க

Vedan: இளம்பெண்ணின் பாலியல் புகார்... ராப்பர் வேடன் மீது வழக்கு பதிவுசெய்த போலீஸ்!

கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த மலையாள ராப் பாடகர் ஹிரண்தாஸ் முரளி(30). சிறுவயதிலேயே மீன் உள்ளிட்டவைகளை குறிவைத்து பிடிப்பதில் திறமைசாலியாக இருந்ததால் வேடன் என அழைக்கப்பட்டார். அந்த பெயரிலேயே மலையா... மேலும் பார்க்க

நீலகிரி: பழங்குடி மாணவருக்கு ராகிங் தொல்லை, 3-ம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்டு - என்ன நடக்கிறது?

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள பைக்காரா பகுதியைச் சேர்ந்த தோடர் பழங்குடியின இளைஞர் ஒருவர் கூடலூரில் உள்ள அரசு கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார். புதிதாகக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் இந... மேலும் பார்க்க

உடுமலைப்பேட்டை: விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு; வனத்துறை சித்ரவதையா? - மலைவாழ் மக்கள் சொல்வதென்ன?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேல்குருமலை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45). இவர் மீது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கஞ்சா க... மேலும் பார்க்க

`நெல்லை கவின் ஆணவக்கொலை' - எவிடென்ஸ் அமைப்பு ஆய்வறிக்கை சொல்வதென்ன?

"நான்கு வெட்டுகளிலேயே கவினுக்கு உயிர் போயிருக்கிறது, கூலிப்படையினரைப்போல அவனது அரிவாள் வெட்டு இருந்திருக்கிறது. அப்படியென்றால் இது திட்டமிடப்பட்ட கூட்டாக சதி செய்த படுகொலையாகவே தெரிகிறது." என்று எவிடெ... மேலும் பார்க்க

தலைக்கேறிய மது போதை; இளைஞரைக் கொன்று எரித்த நண்பர்கள்... கோவையில் அதிர்ச்சி!

மதுரை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் சுரேஷ்குமார் (28). இவர் கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர்களான ரகுபதி (24), முத... மேலும் பார்க்க