`விவாகரத்து விசாரணையின்போது அந்த டி-சர்ட் அணிந்து வந்தது ஏன்?’ - சஹால் சொன்ன விள...
நீலகிரி: பழங்குடி மாணவருக்கு ராகிங் தொல்லை, 3-ம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்டு - என்ன நடக்கிறது?
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள பைக்காரா பகுதியைச் சேர்ந்த தோடர் பழங்குடியின இளைஞர் ஒருவர் கூடலூரில் உள்ள அரசு கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார். புதிதாகக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் இந்த மாணவரை தேநீர் கடை ஒன்றில் வைத்து மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிலர் கடந்த வாரம் ராகிங் செய்திருக்கிறார்கள்.

தனியார் நிறுவன விளம்பர நோட்டீஸை எல்லா மாணவர்களுக்கும் விநியோகம் செய்ய வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். பழங்குடி இளைஞர் மறுக்கவே, கும்பலாக சேர்ந்து அவரைத் தாக்கியுள்ளனர். காயமடைந்த இளைஞரை கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரின் பெற்றோர் , கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முதல் கட்ட நடவடிக்கையாக மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 6 பேரை சஸ்பெண்டு செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள கல்லூரி நிர்வாகம், " கல்லூரி வளாகம் அருகில் கடந்த வாரம் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞர் அடையாளம் காட்டிய 6 மாணவர்களை சஸ்பெண்டு செய்திருக்கிறோம். தொடர் விசாரணையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.