செய்யறிவால் பறிபோகும் வேலை வாய்ப்புகளின் பட்டியல்! மைக்ரோசாஃப்ட் ஆய்வு
செய்யறிவு என்பது, ஏதோ ஓரிடத்தில் இருந்துகொண்டு நமக்காக வேலை செய்யும், நம் வேலையை எளிதாக்கும் என்று மனிதர்கள் நினைத்திருந்த நிலையில், நம் வேலையையே அழித்தொழித்துவிடும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
கடந்த ஒரு சில ஆண்டுகளாக எண்ணற்ற நிபுணத்துவம் பெற்ற பணி வாய்ப்புகளை ஏஐ, தன்னைக் கொண்டு நிரப்பிக் கொண்டிருக்கிறது. உண்மையில் பலரும் செய்யறிவு என்பது மென்பொருள் துறையை மட்டும் பாதிக்கும் என்றுதான் இன்று வரை கருத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், நம் செல்போனில் கூகுள் எனப்படும் தேடுபொறியில் தேடும் விதத்தையே செய்யறிவு மாற்றியமைத்திருக்கிறது, இது பலருக்கும் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை.