செய்திகள் :

கடைசி டெஸ்ட்: அபிமன்யு ஈஸ்வரனுக்கு மீண்டும் மறுக்கப்பட்ட வாய்ப்பு!

post image

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டிலும் அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022 முதல் இந்திய அணியில் இருந்தும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகள் அசத்திய இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ வாய்ப்பு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாகவே இருந்து வருகிறது. அதற்கு சமீபத்திய உதாரணம்தான் அபிமன்யு ஈஸ்வரன்.

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் நேற்று தொடங்கியது. இதிலும் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேஷத்தைச் சேர்ந்த அபிமன்யு ஈஸ்வரன் (29 வயது) 103 முதல்தர போட்டிகளில் 7,841 ரன்கள் குவித்துள்ளார்.

சாய் சுதர்சன் இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடியதால் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்தது. இப்படி பலருக்கும் பிசிசிஐ வாய்ப்பளித்துள்ளது.

அபிமன்யு ஈஸ்வரனுக்காக முகமது கைஃப் போன்ற சில வீரர்கள் மட்டுமே ஆதரவாகப் பேசுகிறார்கள். இருந்தும் பிசிசிஐ ஏன் அவரை கண்டுக்கொள்வதில்லை என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

அபிமன்யு ஈஸ்வரனுக்கு பின்னர் அறிமுகமாகி அவருக்கு முன்பாக பிளேயிங் லெவனில் இடம் பிடித்த வீரர்கள் பட்டியல்:

கே.எஸ்.பரத், இஷான் கிஷன், ரஜத் படிதார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, சூர்யகுமார் யாதவ், முகேஷ் குமார், தேவ்தத் படிக்கல், சர்பராஸ் கான், சாய் சுதர்சன், யஷஸ்வி ஜெஸ்வால், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜுரெல், நிதீஷ் குமார் ரெட்டி, அன்ஷுல் கம்போஜ்.

It is shocking that Abhimanyu Easwaran was denied a chance in the final Test against England.

ஓவல் டெஸ்ட்: வேகப் பந்துவீச்சாளர்கள் அசத்தல்; 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில்... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை படைத்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 31) தொடங்கிய... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தின... மேலும் பார்க்க

ஓவல் டெஸ்ட்டிலிருந்து கிறிஸ் வோக்ஸ் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓ... மேலும் பார்க்க

ஓவல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 224 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜூல... மேலும் பார்க்க

ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய நவாஸ்: பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் வ... மேலும் பார்க்க