செய்திகள் :

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

post image

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (ஜூலை 30) குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கிரைக் எர்வின் 39 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 6 விக்கெட்டுகளையும், நாதன் ஸ்மித் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

நியூசிலாந்து அபார வெற்றி

முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 149 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் டெவான் கான்வே 88 ரன்களும், டேரில் மிட்செல் 80 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே தரப்பில் பிளெஸ்ஸிங் முஸராபானி 3 விக்கெட்டுகளையும், தனாகா சிவாங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

நியூசிலாந்தைக் காட்டிலும் 158 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணி, 165 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணியில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 49 ரன்கள் குவித்தார். அவரைத் தொடர்ந்து, டஃபாட்ஸ்வா சிகா 27 ரன்களும், கேப்டன் கிரைக் எர்வின் 22 ரன்களும் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மாட் ஹென்றி மற்றும் வில்லியம் ஓ’ரூர்க் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

நியூசிலாந்தைக் காட்டிலும் ஜிம்பாப்வே அணி வெறும் 7 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றதால், நியூசிலாந்து அணிக்கு 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நியூசிலாந்து அணி 2.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து இந்த இலக்கை எட்டியது. இதன் மூலம், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஓவல் டெஸ்ட்டிலிருந்து கிறிஸ் வோக்ஸ் விலகல்!

New Zealand won the first Test against Zimbabwe by 9 wickets.

ஓவல் டெஸ்ட்: வேகப் பந்துவீச்சாளர்கள் அசத்தல்; 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில்... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை படைத்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 31) தொடங்கிய... மேலும் பார்க்க

ஓவல் டெஸ்ட்டிலிருந்து கிறிஸ் வோக்ஸ் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓ... மேலும் பார்க்க

ஓவல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 224 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜூல... மேலும் பார்க்க

ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய நவாஸ்: பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் வ... மேலும் பார்க்க

கடைசி டெஸ்ட்: அபிமன்யு ஈஸ்வரனுக்கு மீண்டும் மறுக்கப்பட்ட வாய்ப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டிலும் அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022 முதல் இந்திய அணியில் இருந்தும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல... மேலும் பார்க்க