செய்திகள் :

ஓவல் டெஸ்ட்: வேகப் பந்துவீச்சாளர்கள் அசத்தல்; 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!

post image

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, சாய் சுதர்சன் 38 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 26 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜோஷ் டங் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

வேகப் பந்துவீச்சாளர்கள் அசத்தல்

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸாக் கிராலி மற்றும் பென் டக்கெட் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இருப்பினும், பென் டக்கெட் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸாக் கிராலி 57 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். அதில் 14 பவுண்டரிகள் அடங்கும். அதன் பின், ஆலி போப் 22 ரன்களும், ஜோ ரூட் 29 ரன்களும் எடுத்து முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

அதன் பின், ஜேக்கோப் பெத்தேல் (6 ரன்கள்), ஜேமி ஸ்மித் (8 ரன்கள்), ஜேமி ஓவர்டான் (0 ரன்), கஸ் அட்கின்சன் (11 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்தியா தரப்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

ஓவலில் மழை பெய்து வருவதால் போட்டி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஹாரி ப்ரூக் 48 ரன்களுடனும், ஜோஷ் டங் 0 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து அணி இந்தியாவைக் காட்டிலும் 18 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

In the last Test match against India, England scored 242 runs in the first innings for the loss of 8 wickets.

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை படைத்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 31) தொடங்கிய... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தின... மேலும் பார்க்க

ஓவல் டெஸ்ட்டிலிருந்து கிறிஸ் வோக்ஸ் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓ... மேலும் பார்க்க

ஓவல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 224 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜூல... மேலும் பார்க்க

ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய நவாஸ்: பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் வ... மேலும் பார்க்க

கடைசி டெஸ்ட்: அபிமன்யு ஈஸ்வரனுக்கு மீண்டும் மறுக்கப்பட்ட வாய்ப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டிலும் அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022 முதல் இந்திய அணியில் இருந்தும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல... மேலும் பார்க்க