OPS : `டார்கெட் லிஸிட்டில் பாஜக; நிரந்தர எதிரி இல்லை எனில்..!’ - ஓ.பி.எஸ்ஸின் அட...
இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!
இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை படைத்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 31) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
அதிக முறை 50+ பார்ட்னர்ஷிப்...
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பென் டக்கெட் மற்றும் ஸாக் கிராலி சிறப்பாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தைத் தந்தனர்.
இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 50 ரன்களைக் கடந்த தொடக்க ஆட்டக்காரர்கள் இணை என்ற சாதனையை பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை படைத்துள்ளது. இதுவரை இந்திய அணிக்கு எதிராக இந்த இணை 8 முறை 50 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக அதிக முறை 50+ ரன்கள் குவித்த தொடக்க ஆட்டக்காரர்கள் (டெஸ்ட் போட்டிகளில்)
ஸாக் கிராலி & பென் டக்கெட் (இங்கிலாந்து) - 8 முறை
கார்டான் கிரீனிட்ஜ் & தேஸ்மாண்ட் ஹேன்ஸ் (மே.இ.தீவுகள்) - 8 முறை
அலெஸ்டர் குக் & ஆண்ட்ரூ ஸ்டிராஸ் (இங்கிலாந்து) - 7 முறை
மேத்யூ ஹைடன் & ஜஸ்டின் லாங்கர் (ஆஸ்திரேலியா) - 7 முறை
பில் லாரி & பாப் சிம்ப்சன் (ஆஸ்திரேலியா) - 7 முறை
இதையும் படிக்க: ஓவல் டெஸ்ட்டிலிருந்து கிறிஸ் வோக்ஸ் விலகல்!
Ben Duckett and Zach Crawley have set a joint record in Tests against India.