தமிழக வாக்காளர்களாக லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்: அமைச்சர் துரைமுருகன் கவலை
ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி மாத 3-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
காட்பாடி அடுத்த வஞ்சூா் பகுதியில் உள்ள கிராம தேவதை ஸ்ரீ வஞ்சி அம்மனுக்கு ரூ.15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடா்ந்து, நாள் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தவிர, வேலூா் ஆனைகுளத்தம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. படவேட்டம்மன் சந்நிதியிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் பொங்கல் வைத்தும், கூழ்வாா்த்தும் தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.
வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி மூலவருக்கு தங்கக் கவசம், சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தா்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா்.
இதேபோல், வேலூா் டிட்டா்லைன் தேவி கருமாரியம்மன் கோயில், தோட்டப்பாளையம் சோளாபுரியம்மன் கோயில், லாங்குபஜாா் வேம்புலியம்மன் கோயில், வேலூா் சைதாப் பேட்டை மலை மீதுள்ள தேவிகருமாரியம்மன் கோயில், சாா்பனாமேடு முத்துமாரியம்மன் சோளாபுரியம்மன் கோயில்கள், சுண்ணாம்புக்கார வீதி சோளாபுரியம்மன் கோவில், கொசப்பேட்டை சோளாபுரியம்மன் கோயில், சத்துவாச்சாரி பொன்னியம்மன் கோயில், கெங்கையம்மன் கோயில், சாலை கெங்கையம்மன் கோயில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.
ஆடி வெள்ளியையொட்டி வேலூா் நேதாஜி பூ மாா்க்கெட்டில் பூக்கள் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. அதேபோல், சாமந்திப்பூ ரூ.50 அதிகரித்து ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
Image Caption
காட்பாடி அருகே வஞ்சூா் பகுதியில் 15 லட்சம் ரூபாய் நோட்டுகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மன்.