எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்? 12 ராசிகளுக்கும்!
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஆகஸ்ட் 1 - 7) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
விடாமுயற்சி முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும். உழைப்பு அதிகரிக்கும். உயர்ந்தவர்களுடன் நட்பு உண்டாகும். புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் வேலைகளைச் சலிப்படையாமல் செய்வீர்கள். வியாபாரிகள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். விவசாயிகள் கொள்முதலில் லாபம் காண்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் பலம் குறையும். கலைத் துறையினருக்கு உயர்ந்தோரின் ஆதரவு உண்டு. பெண்கள் சந்தோஷமாக இருப்பீர்கள், மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.
சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 3, 4.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். பண வரவு சீராக இருப்பதால், கடன்களை அடைப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. வியாபாரிகள் புதிய வழிகளில் வருவாயை அதிகரிப்பீர்கள். விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சலைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் புதிய பதவிகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் சிக்கனமாக இருப்பீர்கள். பெண்கள் கணவருடன் அன்பாகப் பழகுவீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 5, 6, 7.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் உதவுவார்கள். தொழிலில் கணக்குகளைச் சரியாக வைத்துக்கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்குப் பணவரவு உண்டு. வியாபாரிகள் உழைத்து முன்னேறுவீர்கள். விவசாயிகள் பால் விற்பனையில் லாபத்தைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் உயரும். கலைத் துறையினர் எதிர்பார்த்த வளர்ச்சியை அடைவீர்கள். பெண்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகச் சேமிப்பில் ஈடுபடுவீர்கள்.
மாணவர்கள் அதிகாலையில் படிக்கத் தொடங்குவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
காரியங்களைச் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் பிரச்னைகள் குறையும். தொழிலில் வளர்ச்சி அடைவதற்கான விஷயங்களை முனைப்புடன் செய்வீர்கள்.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுப்பீர்கள். வியாபாரிகள் செல்வ வளம் உள்ளவர்களைக் கூட்டாளிகளாகச் சேர்ப்பீர்கள். விவசாயிகள் உழைப்பவர்களை அனுசரித்துச் செல்வீர்கள்.
அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்தில் மழலைப் பாக்கியம் காண்பீர்கள்.
மாணவர்கள் யோகா கற்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் தொய்வுகளைச் சமாளிப்பீர்கள். தேவைகள் அதிகரிக்கும். புதிய பொருள்களை வாங்கும்போது கவனம் தேவை.
உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு தள்ளிப் போகும். வியாபாரிகள் பொருள்களைத் தள்ளுபடி விலையில் விற்பீர்கள். விவசாயிகள் குத்தகைப் பாக்கிகளை வசூலிப்பீர்கள்.
அரசியல்வாதிகள் தீவிரமான கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்தினருடன் பாசத்துடன் பழகுவீர்கள். மாணவர்களின் முயற்சிகள் கைகொடுக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். பூர்விக சொத்துகளில் நிலவிய பிரச்னைகள் தீரும். தொழிலைச் சீரமைப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் ரகசியங்களை பகிர வேண்டாம். வியாபாரிகள் வியாபாரத்தில் கவனமாக இருக்கவும். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். கலைத் துறையினர் சிறிய முயற்சிகளில் எதிர்பார்த்த வருவாயைப் பெறுவீர்கள். பெண்கள் பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்பீர்கள்.
மாணவர்கள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
புதிய முயற்சிகளில் யோசித்து முடிவெடுக்கவும். உடல் ஆரோக்கியத்தையும், மனவளத்தையும் பேணிக் காப்பீர்கள். உடனிருப்போர் இல்லம் தேடி வருவார்கள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடனான பிணக்கு மறையும். வியாபாரிகள் கடையை விரிவாக்கம் செய்வீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கலைத் துறையினர் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது உஷாராக இருக்கவும். பெண்கள் கடின சூழ்நிலையில் இருந்து விடுபடுவீர்கள்.
மாணவர்கள் நல்ல, பழக்க வழக்கங்களைக் கற்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
புதிய வாகனங்களை வாங்குவீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும். பொதுநல காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பிரச்னைகளில் அமைதியாக இருக்கவும். வியாபாரிகள் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள் கவனமாக இருப்பது நல்லது. கலைத் துறையினர் நன்மைகளை அடைவீர்கள். பெண்கள் சில அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில்
வெற்றிக் கொடி நாட்டுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
எண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்துவீர்கள். எதிர்காலத் திட்டங்கள் நிறைவேறும். பொறுமையாகவும் பொறுப்புடனும் செயல்படவும்.
உத்தியோகஸ்தர்கள் கடின வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.
அரசியல்வாதிகள் தேவையற்ற சிந்தனைகளைக் குறைக்கவும். கலைத் துறையினரின் செயல்களில் வேகமும் ஆற்றலும் கூடும். பெண்கள் திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
மாணவர்கள் வெற்றிக்காகத் திட்டமிடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
தனித்திறமைகள் வெளிப்படும். பணவரவு சீராக வந்துகொண்டிருக்கும். மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வந்து சேரும். தொழிலில் இலக்கை எட்டுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பேச்சில் கவனம் தேவை. வியாபாரிகள் புதிய பொருள்களை விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள்.
அரசியல்வாதிகள் புதிய பதவிகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் பிறருக்கு உதவுவீர்கள். பெண்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள்.
மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
எடுத்த காரியங்களைத் தள்ளிப் போடாமல் உடனுக்குடன் முடிப்பீர்கள். கொள்கை, லட்சியத்தை விட்டு கொடுக்க மாட்டீர்கள். குழந்தைகளை நல்வழிப்படுத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் வெற்றியாகும். வியாபாரிகள் கடன்களை அடைப்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகை முயற்சிகளில் இறங்க வேண்டாம்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு உதவிகள் கிடைக்கும்.
பெண்களின் முயற்சிகளுக்கு ஆதரவு உண்டு. மாணவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.‘
சந்திராஷ்டமம் - இல்லை.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
பிரச்னைகள் தீர்ந்து ஏற்றமான பலன்களைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் மதிப்பான பதவி ஒன்று கிடைக்கும். புதிய உத்திகளைச் செயல்படுத்துவீர்கள். எதிர்ப்புகள் இருக்காது.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகக் கடன்களைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் கவனமாகச் செயல்படுவீர்கள். விவசாயிகள் உழைத்து முன்னேறுவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப் பயணங்களைச் செய்வீர்கள். கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் சாதகமாக அமையும். பெண்கள் சுப காரியங்களை நடத்துவீர்கள்.
மாணவர்கள் பிறருக்கு உதவுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 1, 2.