பறந்து போ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
பறந்து போ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுல் ரியான் நடிப்பில் வெளியான ‘பறந்து போ’ திரைப்படம் குழந்தை வளர்ப்பு மற்றும் பெற்றோர்கள் - குழந்தைகளுக்கு இடையேயான இடைவெளிகளைக் குறித்தும் பேசியிருந்தது.
மொத்த படமும் நகைச்சுவை பாணியில் இருந்ததால் இப்படமும் ரசிகர்களிடம் அசத்தலான வரவேற்பைப் பெற்றதுடன் இந்தாண்டு வெளியான சிறந்த தமிழ்ப் படங்களில் ஒன்று எனப் பாராட்டுகளையும் பெற்றது.

கடந்த ஜூலை 4 ஆம் தேதி வெளியான இப்படம், அடுத்தடுத்த நாள்களில் திரைகள் அதிகரித்தன.
இந்த நிலையில் பறந்து போ திரைப்படம் வரும் ஆக. 5 ஆம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காளி, மராத்தி மொழிகளில் வெளியாகிறது.
இதையும் படிக்க: தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!