செய்திகள் :

முதல்முறையாக தேசிய விருது: சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி!

post image

சிறந்த நடிகைக்கான தேசிய விருது பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தேர்வாகியுள்ளார்.

மத்திய அரசு வழங்கும் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தமுறை 2023 படங்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகராக ஷாருக் கானும் விக்ராந்த் மாஸ்ஸியும் தேர்வாகினர்.

சிறந்த நடிகைக்கான விருது ராணி முகர்ஜிக்கு மிர்சஸ் சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே படத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.

ஆசிமா சிப்பர் இயக்கத்தில் 2023-இல் வெளியான இந்தப் படத்தில் ராணி முகர்ஜி தாயாக சிறப்பாக நடித்திருப்பார்.

நார்வேயில் நடந்த உண்மைக் கதையை மையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ராணி முகர்ஜியின் நடிப்பு வெளியான போதே விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

இது இவருக்கு முதல் தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த துணை நடிகைக்கான விருது ஊர்வசிக்கு உள்ளொழுக்கு படத்துக்காக வழங்கப்பட்டது.

Bollywood actress Rani Mukerji has been nominated for the National Award for Best Actress.

பறந்து போ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

பறந்து போ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுல் ரியான் நடிப்பில் வெளியான ‘பறந்து போ’ திரைப்படம... மேலும் பார்க்க

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

2023 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இவற்றில் சிறந்த இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் (வாத்தி படத்துக்காக) விருது பெற்றுள்ளார்.இரண்டாவது முறையாக தேசிய விருத... மேலும் பார்க்க

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு

கேரளத்தில் கடும் எதிா்ப்பு எழுந்ததி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த இயக்குநர் சுதிப்தோ சென் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரசந்தனு மொஹபத்ரா ஆகிய பிரிவுகளில் விருதுகள... மேலும் பார்க்க

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

இந்தியாவின் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் வாத்தி படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 2022ஆம்... மேலும் பார்க்க

தேசிய விருதுகள்: புனைவு அல்லாத திரைப்பட விருதுகள்!

மத்திய அரசு வழங்கும் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தமுறை 2023 படங்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. நான் -பீச்சர் ஃபிலிம்ஸ் எனப்படும் புனைவு அல்லாத திரைப்படங்கள் என 15 பி... மேலும் பார்க்க