செய்திகள் :

Vedan: இளம்பெண்ணின் பாலியல் புகார்... ராப்பர் வேடன் மீது வழக்கு பதிவுசெய்த போலீஸ்!

post image

கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த மலையாள ராப் பாடகர் ஹிரண்தாஸ் முரளி(30). சிறுவயதிலேயே மீன் உள்ளிட்டவைகளை குறிவைத்து பிடிப்பதில் திறமைசாலியாக இருந்ததால் வேடன் என அழைக்கப்பட்டார். அந்த பெயரிலேயே மலையாள ராப் பாடல்கள் மூலம் பிரபலம் அடைந்தார் ஹிரண்தாஸ் முரளி. அவரது தாய் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். ராப்பர் வேடன் என பிரபலமான ஹிரண்தாஸ் முரளி நண்பர்களுடன் ஒரு அறையில் இருக்கும் போது போலீஸார் சோதனை நடத்தி அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்ததுடன் வேடனை கைதுசெய்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவரது கழுத்தில் புலிப்பல் டாலர் மாலை கிடப்பதாக வனத்துறை விசாரணை நடத்தியது. ராப்பர் வேடனை காவல்துறை பழிவாங்குவதாக அரசியல் கட்சியினர் கருத்துதெரிவித்தனர். அந்த வழக்கு மூலம் கேரளா மட்டுமல்லாது தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பிரபலமானார் வேடன்.

ராப்பர் வேடன் மீது பாலியல் வழக்கு

'கடலம்ம கரைஞ்ஞல்லே பெற்றது...' என்ற ராப்பர் வேடனின் மலையாள பாடல் மொழிகளை கடந்து தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும் அளவுக்கு பிரபலமானார் வேடன். இந்த நிலையில் பாலியல் வழக்கில் சிக்கியுள்ளார் ராப்பர் வேடன். இளம் பெண் டாக்டர் ஒருவர் திருக்காக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2021 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் கோழிக்கோடு, கொச்சி உள்ளிட்ட இடங்களில் வைத்து தன்னை பாலியல்வன்கொடுமை செய்ததாக இளம் பெண் தெரிவித்துள்ளார். பின்னர் திருமணம் செய்யமறுத்ததால் அது மனதளவில் தனக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும். அதைத்தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்ததால் புகார் அளிக்க தாமதம் ஆனதாகவும் இளம் பெண் கூறியுள்ளார்.

மலையாள ராப் பாடகர் வேடன்

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "திருமணம் செய்வதாக கூறி வேடன் தன்னை இரண்டு ஆண்டுகளாக ஆறு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் பெண் டாக்டர் புகார் அளித்துள்ளார். அதிலும் போதைபொருள்கள் பயன்படுத்திவிட்டு வந்து வன்கொடுமை செய்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஐ.பி.சி 376 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளோம். பாலியல் வன்கொடுமை மட்டும் அல்லாது பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையும் புகாரில் உள்ளது. விசாரணை முதற்கட்ட நிலையில் உள்ளது" என்றனர். இதற்கிடையே புகார் அளித்த பெண்ணுக்கு போனில் மிரட்டல் வருவதாகவும், வீட்டுக்கு சிலர் நேரில் சென்று மிரட்டல் விடுத்துவருவதாகவும்... இளம் பெண்ணுக்கு பாதுகாப்பு கேட்டு கோர்ட்டை நாட உள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா: அரசு சம்பளம் ரூ.15,000... ஆனால் 24 வீடுகள், ரூ.30 கோடி சொத்து! - சிக்கிய முன்னாள் ஊழியர்!

கர்நாடகாவின் லஞ்ச ஒழிப்பு மற்றும் அரசு கண்காணிப்பு அமைப்பான லோக்தாயுக்தா அதிகாரிகள், கர்நாடகா கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் (KRIDL) முன்னாள் எழுத்தர் வீட்டை சோதனை செய்தபோது கணக்கில்... மேலும் பார்க்க

Anil Ambani: ரூ.3000 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி; அனில் அம்பானியை விசாரிக்கும் ED; பின்னணி என்ன?

யெஸ் வங்கியில் ரூ.3000 கோடி கடன் வாங்கி அதனைத் திரும்பக் கொடுக்காமல் மோசடி செய்ததாக தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.2017-19ம் ஆண்டுகளில் அனில் அம்பானியின் ... மேலும் பார்க்க

சென்னை: இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது; என்ன நடந்தது?

சென்னை, வேப்பேரியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் பைக் டாக்ஸி ஓட்டுநர் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 20 நாட்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்ட பெண் ஊபர் மூலம் பைக்... மேலும் பார்க்க

8 ஆம் வகுப்பு மாணவியைத் திருமணம் செய்த 40 வயது பள்ளி ஆசிரியர்- தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!

40 வயதுடைய பள்ளி ஆசிரியர் ஒருவர், 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் குழந்தைத் திருமணம் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், தெ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: தொழிலாளி படுகொலை; புரோட்டாவிற்கு சால்ணா கேட்டதால் தகராறா? -போலீஸ் தீவிர விசாரணை!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சேது நகர் பகுதியை சேர்ந்தவர் களஞ்சியம் (49). மீனவரான இவர் அவ்வப்போது பல்வேறு கூலி வேலைகளும் செய்து வருபவர். கடந்த சில நாள்களுக்கு முன் இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் சப்ளையராக வ... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலை: கவின் உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள் - அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி

தூத்துக்குடியைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் கவின் குமாரும், திருநெல்வேலியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் சரவணன் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் மகளும் காதலித்து வந்த நிலையில், அவரின் சகோதரர் சுர்ஜித் ஜூலை 27-ம்... மேலும் பார்க்க