ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!
தேசிய விருது பெற்ற கிங் கான்! சிறந்த நடிகராக ஜவான் ஷாருக்!
பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் கிங் என்றழைக்கப்படும் ஷாருக் கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய திரைப்பட விருதுகளை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இன்று அறிவித்தது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகும் எதிர்பார்த்த சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக் கான் தட்டிச் சென்றுள்ளார்.
1992-ல் தனது திரைப்பயணத்தைத் தொடங்கி, 33 ஆண்டுகளாக திரையுலகில் தனக்கென தனியிடத்தையும் நீங்கா இடத்தையும் பெற்றிருக்கும் ஷாருக் கான், ஜவான் படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருதைப் பெற்றுள்ளார்.
தமிழ் இயக்குநர் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லீஸ் என்டெர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் நடிகர்கள் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் அனிருத் இசையமைப்பில் வெளியான ஜவான் திரைப்படம், உலகளவில் வசூல்ரீதியாக சாதனை படைத்தது.
1992-ல் தீவானே திரைப்படத்தில் அறிமுகமான ஷாருக் கான்தான், தற்போது இந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத அடையாளமாகவும் இருந்து வருகிறார்.
மேலும், 12th ஃபெயில் படத்தில் நடித்த விக்ராந்த் மாஸிக்கும் சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதை இருவரும் பகிர்ந்து கொள்கின்றனர்.