ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
`விவாகரத்து விசாரணையின்போது அந்த டி-சர்ட் அணிந்து வந்தது ஏன்?’ - சஹால் சொன்ன விளக்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹாலுக்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

விவாகரத்து
நடிகை, நடன இயக்குநர், யூ-டியூபர் மற்றும் பல் மருத்துவர் என பல பரிமாணங்கள் கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் தனஸ்ரீ வர்மா என்பவரைத்தான் சஹால் திருமணம் செய்து கொண்டார். இதனிடையே சஹால் மற்றும் தனஶ்ரீ இருவரும் கடந்த பிப்ரவரி 5ம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற மனு தாக்கல் செய்தனர்.
நீதிமன்றம், விவாகரத்துக்கான ஒப்புதல் விதிமுறைகளுடன் சஹல், தனஶ்ரீக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. சாஹலும் இதற்கு ஒத்துக்கொண்டார். இருவருக்கும் மும்பை குடும்ப நீதிமன்றம் விவாகரத்தும் வழங்கியது.
டி- சர்ட் விவகாரம்
இதனிடையே இந்த விவாகரத்து தொடர்பான விசாரணையின்போது சஹால் 'Be Your Own Sugar Daddy' என்ற டி- சர்ட்டை அணிந்து வந்திருந்தார்.(அதாவது, நிதி தேவைக்கு வேறொருவரை நம்பியிருப்பதை விட, நிதி சுதந்திரத்தை அடைதல் மற்றும் சொந்த தேவைகளை கவனித்துக்கொள்வது.) அது அந்த சமயத்தில் அது பேசுப்பொருளாக மாறி இருந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் அணிந்து வந்த டி- சர்ட் குறித்து சஹால் பேசியிருக்கிறார்.

``அன்று அங்கே நான் தேவையில்லாமல் எதையும் செய்ய விரும்பவில்லை. அவர்களுக்கு ஒரே ஒரு செய்தியை மட்டுமே சொல்ல விரும்பினேன். முதலில், நான் எதையும் சொல்ல வேண்டும் என்று கூட யோசிக்கவில்லை. ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து சில விஷயங்களை செய்த போது, 'இனி என்ன அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே...' என்ற மனநிலையில்தான் அதை செய்தேன்" என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...