மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை வினாடிக்கு 20,500 கன அடியாக சரிந்தது.
காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை தணிந்ததால் வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,500 கன அடியிலிருந்து வினாடிக்கு 20,500 கன அடியாக சரிந்தது.
நீர் வரத்து சரிந்த காரணத்தால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 20,500 கன அடியாக குறைக்கப்பட்டது.
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 2,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.