ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
மோடியும் டிரம்பும் இணைந்து கூறிய நட்பு என்னவாயிற்று?: ப.சிதம்பரம் கேள்வி
மோடியும் டிரம்பும் இணைந்து கூறிய நட்பு என்னவாயிற்று என முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் மோடி-டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.
இந்நிலையில், மோடியும் டிரம்பும் இணைந்து கூறிய நட்பு என்னவாயிற்று? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியாவின் அனைத்து பொருள்களுக்கும் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால் கூடுதல் அபராதமும் விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருப்பது அமெரிக்க-இந்தியா வர்த்தகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது இந்தியாவுக்கு ஒரு பெரிய அடியாகும்.
வெளியுறவு கொள்கை மற்றும் அரசப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மோடி-டிரம்ப் நட்புறவு கொடுக்க முடியாது. இந்தியாவை சிறந்த நாடாக்குவோம்(மெகா) என மோடியும், அமெரிக்காவை சிறந்த நாடாக்குவோம்(மெகா) என மோடியும் டிரம்பும் இணைந்து கூறினார்களே, என்னவாயிற்று இப்போது என கூறியுள்ளார்.
மேலும், 'தோஸ்தி' என்பது ராஜதந்திரம் மற்றும் கடினமான பேச்சுவார்த்தைகளுக்கு மாற்று கிடையாது.
அமெரிக்கா விதித்த வரி உலக வர்த்தக அமைப்பு விதிகளை தெளிவாக மீறுவதாகும்
மோடி - டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை: காங்கிரஸ் விமரிசனம்