செய்திகள் :

தலைக்கேறிய மது போதை; இளைஞரைக் கொன்று எரித்த நண்பர்கள்... கோவையில் அதிர்ச்சி!

post image

மதுரை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் சுரேஷ்குமார் (28). இவர் கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர்களான ரகுபதி (24), முத்துக்கிருஷ்ணன் (24), மற்றும் கரண் (23) ஆகியோர் காங்கேயம்பாளையம் அருகே நேற்று  மாலை மது அருந்தி கொண்டிருந்தனர்.

மது

அப்போது அங்கு சுரேஷ் சென்றுள்ளார். ஏற்கனவே மது போதையில் இருந்த சுரேஷ் நண்பர்களிடம் மேலும் மது அருந்துவதற்கு பணம் கேட்டுள்ளார்.

இதனால் சுரேஷ் மற்றும் அவரின் நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாகவும் மாறியது. இந்த மோதலின்போது, ரகுபதி, முத்துக்கிருஷ்ணன், கரண் ஆகியோர் சுரேஷ் குமாரை மது பாட்டில் மூலம் கடுமையாக தாக்கியுள்ளனர்.

சுரேஷ் சடலமாக

இதில், சுரேஷின் கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை மறைப்பதற்காக நண்பர்கள் மூன்று பேரும் சுரேஷின் உடலை எரித்து, ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் புதைத்துள்ளனர்.

பிறகு தங்களின் குற்றத்தை உணர்ந்த அவர்கள் 3 பேரும் இன்று மதியம் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். காவல்துறையிடம் சம்பவம் பற்றி சொல்லிய நிலையில், அவர்கள் சுரேஷ் குமாரின் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்றனர்.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

முதல்கட்ட விசாரணையில் சுரேஷின் உடலை முழுமையாக எரிக்க முடியவில்லை என்பதால் பயந்து காவல்துறையிடம் சரணடைந்தது தெரியவந்துள்ளது. சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடுமலைப்பேட்டை: விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு; வனத்துறை சித்ரவதையா? - மலைவாழ் மக்கள் சொல்வதென்ன?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேல்குருமலை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45). இவர் மீது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கஞ்சா க... மேலும் பார்க்க

"நானும் கவினும் உண்மையா காதலிச்சோம்; தவறா பேசாதீங்க" - நடந்ததை விவரிக்கும் கவின் காதலி

திருநெல்வேலியில் பட்டியலினத்தைச் சேர்ந்த கவின் என்பவரை, காவல்துறை அதிகாரிகளான சரவணன் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் மகனும். கவினின் காதலியின் சகோதரருமான சுர்ஜித் ஜூலை 27-ம் தேதி கொடூரமாக ஆணவக்கொலை செய்த ... மேலும் பார்க்க

`நெல்லை கவின் ஆணவக்கொலை' - எவிடென்ஸ் அமைப்பு ஆய்வறிக்கை சொல்வதென்ன?

"நான்கு வெட்டுகளிலேயே கவினுக்கு உயிர் போயிருக்கிறது, கூலிப்படையினரைப்போல அவனது அரிவாள் வெட்டு இருந்திருக்கிறது. அப்படியென்றால் இது திட்டமிடப்பட்ட கூட்டாக சதி செய்த படுகொலையாகவே தெரிகிறது." என்று எவிடெ... மேலும் பார்க்க

சென்னை: ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு - சிசிடிவி-யைப் பார்த்ததும் அடையாளம் கண்ட போலீஸ்!

சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் ரோஸி (40) இவர், சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பணி முடிந்து நேற்று மாலை வீட்டுக்குச் செல்ல பெருங்குடி ரயில் நிலையத்தில் க... மேலும் பார்க்க

சென்னை: ஆட்டோ டிரைவர் கொலை - உறவினர் உட்பட 3 பேர் கைது!

சென்னை, தண்டையார்பேட்டை, கும்மாளம்மன் கோயில் தெருவில் வசித்தவர் அருண்மொழி (31). இவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். கடந்த 29.07.2025-ம் தேதி தண்டையார்பேட்டை, முண்ட கண்ணியம்மன் கோயில் அருகே அருண்மொழி நின்று... மேலும் பார்க்க

Meghalaya Honeymoon Horror: திரைப்படமாகும் மேகாலயா தேனிலவு கொடூரம்!

மேகாலயாவில் கடந்த மே மாதம் தேனிலவுக்கு சென்ற ராஜா ரகுவன்சியை அவரது மனைவி தனது காதலன் துணையோடு அடியாட்களை வைத்து கொலை செய்தார். இப்படுகொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மா... மேலும் பார்க்க