செய்திகள் :

பாலத்தீனத்தை அங்கீகரிக்கவிருக்கும் பிரிட்டன், பிரான்ஸ் - மத்திய கிழக்கு வரலாற்றில் திருப்புமுனையா?

post image

கடந்த சில நாள்களில் பாலத்தீன தனி நாடுக்கு, ஐரோப்பாவின் முக்கிய அரசுகளான பிரான்ஸும், பிரிட்டனும் அங்கீகாரம் அளிக்கப்போவதாக அறிவித்தது மத்தியக் கிழக்கு அரசியலில் புதிய திருப்பு முனையாக அமைந்திருக்கிறது. 


காஸாவில் 2023 அக்டோபரிலிருந்து இஸ்ரேல் தொடுத்து நடத்தி வரும் கடும் தாக்குதல் , அப்பகுதி மக்களுக்கு பேரழிவைத் தந்து வரும் நிலையில்,  காஸாவில் தற்போது நிலவும் பட்டினிச் சூழல் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பல அரசுகளுக்கு தார்மீக மற்றும் அரசியல் ரீதியான நெருக்கடியை தந்திருக்கிறது. 


காஸாவின் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணமாக ஹமாஸ் இயக்கத்தினர் 2023 அக்டோபரில் நடத்திய அதிரடித் தாக்குதல்தான் என்றாலும்,  இஸ்ரேலின் பதிலடி  அளவுக்கதிகமாக அமைந்து , காஸா பகுதியில் பெரும் மனித நேய நெருக்கடியை உருவாக்கியிருப்பதே  மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த மன மாற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. 

காஸா அகதிகள் முகாமைத் தாக்கிய இஸ்ரேல்

எல்லை மீறிய பதில் தாக்குதல்

ஹமாஸின் 2023 தாக்குதல் மிக மோசமான பயங்கரவாத நடவடிக்கை என்று கண்டித்த மேற்குலக நாடுகளில் பலவற்றில் இப்போது , இஸ்ரேலின் பதில் தாக்குதல் எல்லை மீறிப் போயிருக்கிறது என்ற உணர்வு மேலோங்கியிருக்கிறது 


ஹமாஸ் தாக்குதல் மோசமானது என்பதில் பெரிய கருத்து வேறுபாடு இல்லை.  இஸ்ரேலின் எல்லைப்புற நகர்களில் ஊடுருவித் தாக்கிய ஹமாஸ் இயக்கத்தினர் சுமார் 1200 இஸ்ரேலியர்களைக் கொன்றனர்.  சுமார் 250 இஸ்ரேலியர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்தனர்.  


அதற்குப் பதிலடி தர  இறங்கிய பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கடும்போக்கு வலது சாரி இஸ்ரேலிய அரசு,  கடந்த சுமார் 20 மாதங்களாக காஸா பகுதியில் தினசரி குண்டுத் தாக்குதல்களை நடத்தி சுமார் 20 லட்சம் பேர் வசித்த  அந்த சிறிய பகுதியை  ஏறக்குறைய தரைமட்டமாக்கிவிட்டது.  

இஸ்ரேலியின் இந்தத் தாக்குதல்களில் சுமார் 60,000 பாலத்தீனர்கள் ( இவர்களில் பெரும்பாலோனோர் பெண்கள், குழந்தைகள் மற்றும் இதர பொதுமக்கள்)  கொல்லப்பட்டதாக காஸா சுகாதாரத் துறை கூறுகிறது. 

காஸா பகுதி முற்றிலுமாக இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கையை பக்கசார்பற்ற நிலையில் சரிபார்க்க வாய்ப்பில்லை.   இஸ்ரேல் வழக்கம்போல இந்த எண்ணிக்கையை மறுக்கிறது.  சிவிலியன்களை மனிதக் கேடயமாக ஹமாஸ் இயக்கத்தினர் பயன்படுத்தியதே பல பொதுமக்கள் கொல்லப்படுவதற்குக் காரணம் என்று இஸ்ரேல் கூறுகிறது. 


ஆனால், இறந்தவர்கள் எண்ணிக்கை பற்றிய பிரச்சனை ஒரு புறமிருக்க,  பாதிக்கப்பட்டு, காஸாவை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு  ஐநா ஏஜென்சிகளின் மூலம் உணவு விநியோகிப்பதில் கூட இஸ்ரேலின் கடும்போக்கால் அப்பகுதியில் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படும் மனித நேயத் துயரம் பிரான்ஸின் நிலைப்பாட்டை முதலில் மாற்றியது. 

இமானுவேல் மேக்ரான்

கடந்த வாரம் இது குறித்து முதலில் அறிவிப்பு வெளியிட்ட,  பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான்,  “மத்தியக் கிழக்கு பகுதியில் நியாயமான,  நீடித்து நிற்கக்கூடிய அமைதியை உருவாக்க”  பிரான்சுக்கு வரலாற்று ரீதியாக உள்ள உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டி,  அதன் அடிப்படையில் பாலத்தீன நாட்டுக்கு அங்கீகாரம் வழங்க பிரான்ஸ் முடிவெடுத்திருப்பதாகக் கூறினார்.


பிரான்சின் இந்த அங்கீகாரம் வரும் செப்டம்பரில் ஐநா மன்ற பொதுச்சபைத் தொடரில் முறையாக வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
மெக்ரோனின் இந்த அறிவிப்பு கடந்த வாரம் வந்திருந்தாலும், அதற்கு முன்னரேயே சில மாதங்களாக பிரான்ஸ் இந்த நடவடிக்கை பற்றி ஆலோசித்துக்கொண்டிருந்தது.


 ஜி-7 நாடுகள் அமைப்பின் பிறநாடுகளையும் , அதிலும் குறிப்பாக பிரிட்டனையும் , இதில் இணைத்துக்கொள்ள மெக்ரோன் முயற்சி எடுத்தார் ஆனால் அது அப்போது உடனடியாக பலனளிக்கவில்லை.

பிரான்சின் இந்த அறிவிப்பை இஸ்ரேல் கடுமையாக விமர்சித்தது.  பிரான்சின் இந்த முடிவு “பயங்கரவாதத்துக்கு தரப்படும் பரிசு” என்றும்,  ஈரானின் கைப்பாவையாக ஹமாஸ் தலைமையிலான காசா செயல்பட்டதைப் போல, பாலத்தீனமும் இரானின் கைப்பாவையாக இஸ்ரேலுக்கு எதிராக இயங்கவே இது துணை செய்யும் என்று கூறினார் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.

அமெரிக்காவின் எதிர்வினையில் சற்று குழப்பங்கள் காணப்பட்டது.  அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க் ருபையோ இந்த அறிவிப்பை கண்டித்தாலும்,  அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுபற்றி சற்று அலட்டிக்கொள்ளாத தொனியிலேயே கருத்து வெளியிட்டார். 

ஆனால் மெக்ரோனின் இந்த அறிவிப்பு குறியீட்டளவிலானதுதான்.  ஏனெனில் பாலத்தீனத்தில் கள யதார்த்தம் அப்படி;  ஒரு தனி நாடு உருவாகி செயல்படக்கூடிய நிலைமை அங்கு தற்போது இல்லை.  

ஒரு பகுதியை தனி நாடாக சர்வதேச சமூகம் அங்கீகரிக்க அப்பகுதி சில குறிப்பிட்ட நிபந்தனைகளை, அல்லது,  குணாதிசயங்களைப் பெற்றிருக்கவேண்டும்.   நிரந்தரமான ஒரே இடத்தில் தங்கியிருக்கும்  மக்கள் தொகை, வரையறுக்கப்பட்ட நிலப்பிரதேசம், ஒரு அரசாங்கம், மற்றும் சர்வதேச சமூகத்துடன் உறவுகளைப் பேண அதற்கு இருக்கும் திறன் ஆகியவை அவை. 

இஸ்ரேல் - பாலஸ்தீனம்


இந்தக் குணாதிசயங்களைப் பாலத்தீனம் பெற்றிருக்கிறதா என்ற விஷயம் ஒரு புறமிருக்க,  இஸ்ரேல் பாலத்தீன பிரச்னைக்கு இரு நாட்டு தீர்வு ( Two State solution) என்ற  இஸ்ரேல் உருவானதிலிருந்து முன்வைக்கப்படும் யோசனைக்கு , பிரான்ஸின் இந்த அறிவிப்பு  வலு சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.  


பிரான்ஸ் இந்த அறிவிப்பின் மூலம்,  ஜி 7 நாடுகளில் , பாலத்தீனத்தை அங்கீகரித்த முதல் நாடு என்ற பெயரைப் பெற்றது. 

இதற்கு முன்னரே பாலத்தீனத்தை 147 உலக நாடுகள் அங்கீகரித்திருக்கின்றன . கடந்த ஆண்டுதான்  ஸ்பெயின் , நார்வே  மற்றும் அயர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் பாலத்தீனத்தை அங்கீகரித்த உலக நாடுகள் பட்டியலில் சேர்ந்தன என்பது கவனிக்கத்தக்கது. 

பிரிட்டனின் மன மாற்றம்


பிரான்சின் இந்த முடிவை அடுத்து மேற்கு ஐரோப்பாவில் மற்றொரு வல்லரசான பிரிட்டனும் இந்த அணியில் சேருமா என்ற கேள்வி எழுந்தது.

முதலில் வெளிப்படையாக பிரிட்டிஷ் அரசு இது பற்றி பிடி கொடுக்கவில்லை. 

ஆனால் பிரிட்டனின் உள் நாட்டு அரசியலில் ஏற்பட்டுவரும் சலனங்களும் அதிர்வுகளும் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமரின் பாலத்தீன நிலைப்பாட்டை மாற்றியிருக்கின்றன. 

பிரிட்டன் , பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கும் என்ற அறிவிப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்டார் ஸ்டார்மர். 

ஆனால் பிரிட்டனின் இந்த அறிவிப்பு சில நிபந்தனைகளை உள்ளடக்கியது. 

இஸ்ரேல் செப்டம்பருக்குள் காஸாவின் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை, ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இசையவில்லை , மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைத்துக்கொள்ளும் திட்டத்தை கைவிடவில்லை,   இரு நாட்டுத் தீர்வுக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் பிரிட்டன் பாலத்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் என்றார் அவர். 

பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்

ஹமாஸும் ,  எஞ்சியுள்ள இஸ்‌ரேலியப் பணயக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், தனது ஆயுதங்களை கைவிட்டு,  புதிதாக அமையவுள்ள பாலத்தீன அரசில் பங்கேற்காமல் இருக்கவேண்டும் போன்ற நிபந்தனைகளையும் ஸ்டாமர் விதித்தாலும்,  அதை பாலத்தீன அங்கீகாரம் என்ற பிரச்சனையுடன் அவர் தொடர்பு படுத்தவில்லை. 

பிரான்ஸின் முடிவைப் போலவே பிரிட்டனின் இந்த அறிவிப்பும் இஸ்ரேலிய அரசால் கடும் கண்டனத்துக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அலட்டிக்கொள்ளாத எதிர்வினைக்கும் உள்ளாகியிருக்கிறது. 

பிரிட்டனின் இந்த அறிவிப்புக்கு பின்னால் பிரிட்டனின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களும் சற்று பிணைந்திருக்கின்றன.

ஆளும் தொழிற்கட்சிக்குள்ளேயே பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இஸ்ரேல் மீது பிரிட்டன் காட்டி வரும் மென்மையான போக்கை எதிர்த்து வந்தனர்.  

பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் கட்சி வேற்றுமைகள் கடந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் , சுதந்திர பாலத்தீன நாட்டை பிரதமர் கியர் ஸ்டாமர் அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.  இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தொழிற்கட்சி உறுப்பினர்கள். 


பிரிட்டிஷ் பொது மக்கள் மத்தியிலும் இது குறித்து அதிருப்தி நிலவுவதை பல கருத்து கணிப்புகள் காட்டின. 

இது தவிர, தொழிற்கட்சியின் முன்னாள் தலைவரும் , கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சுயேச்சை எம்.பி ,ஜெர்மி கார்பினும், மற்றொரு தொழிற்கட்சி எம்.பி ஸாரா சுல்தானாவும்  புதிதாக ஒரு இடது சாரிக் கட்சி ஒன்றை தொடங்கப்போவதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது பிரிட்டிஷ் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கட்சி அறிவிப்பு வந்த முதல் சில நாட்களிலேயே இணைய தளம் வழியாக கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சமாகியதாக செய்திகள் கூறின.  

ஜெர்மி கார்பின் தொடக்கத்திலிருந்தே இஸ்ரேலை கடுமையாக விமர்சிப்பவர்.  பாலத்தீன சுதந்திரத்துக்காகவும், இரு நாட்டுத் தீர்வுக்காகவும் தொடர்ந்து பேசிவருபவர்.   

இந்த நிலையில்,  புதியக் கட்சிக்கு பெருகும் ஆதரவு,  தொழிற்கட்சியின் ஆதரவைப் பாதிக்கும் என்ற அச்சங்கள் இருக்கின்றன.  

பிரதமர் ஸ்டாமரின் இஸ்ரேல் குறித்த புதிய நிலைப்பாடு,  ஜெர்மி கார்பின் கட்சி அறிவிப்புடன் நேரடியாகத் தொடர்புடையதாகக் கூறமுடியாவிட்டாலும்,  இந்த அரசியல் கள நிலவரங்கள் அவர் முடிவில் தாக்கம் செலுத்தியிருக்கக்கூடும்.

பாலஸ்தீனம்

பாலத்தீனம் - ஒரு வரலாற்றுப் பின்னணி

பாலத்தீனப் பிரச்சனை 1948ல் இஸ்ரேல் உருவானதிலிருந்தே மத்தியக் கிழக்குப் பிரதேசத்தில் மட்டுமல்லாது உலக அளவிலும் கேந்திர அரசியல் தலைவலிகளைத் தந்து வரும் ஒன்று. 

இஸ்ரேல் 1947ல் பாலத்தீனர்களுடன் நடத்திய போரை அடுத்து 1948ல்  சுதந்திர நாடாக உருவானது.  

ஆனால் அரபு மொழி பேசும் வரலாற்று ரீதியான பாலத்தீனப் பகுதியில் 20ம் நூற்றாண்டின் இரு உலகப் போர்களுக்கிடையேயான கால கட்டத்தில் மெல்ல மெல்ல ஐரோப்பாவின் பல நாடுகளிலிருந்தும் நடந்த யூதக் குடியேற்றம்,  இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டங்களில் ஜெர்மனியில் ஹிட்லரின் யூத இனப் படுகொலைகளுக்குப் பின் தீவிரமடைந்தது. 


இந்த காலகட்டத்தில் பாலத்தீனத்தில் குடியேறிய யூதர்களின் தலைவரான பென் குரியன் உள்நாட்டின் ஏற்கனவே வசித்து வந்த பாலத்தீனர்களுடன் மோதி இஸ்ரேலை உருவாக்கினார். 


யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற நாட்டை பாலத்தீனத்தில் அனுமதிக்க அப்போது ஐ.நாவின் உத்தரவில் பாலத்தீனத்தை நிர்வகித்த பிரிட்டிஷ் அரசு கொள்கை ரீதியில் ஆதரவளித்தது.  ஆனால் பிரிட்டன் அப்போதும் இஸ்ரேல் என்ற நாடு உருவாவது, அங்கு ஏற்கனவே வசித்து வரும் மற்ற மத மக்கள் ( பாலத்தீன முஸ்லிம்கள்) பாதிக்கப்படாமல் நடக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. 

இதுதான் இரு நாட்டு தீர்வுக்கான விதை எனலாம். 

ஆனால் இஸ்ரேல் உருவான காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனர்கள் தங்கள் சொந்த நிலங்களையும், வீடுகளையும் விட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேற நேர்ந்த அவலத்தை “நக்பா” ( பாலத்தீனப் பேரழிவு) என்று குறிப்பிட்டனர். 

காஸா போர்

சர்வதேச அங்கீகாரமும் வல்லரசுகள் அரசியலும் 

இஸ்ரேலின் உருவாக்கத்துக்குப் பின் இஸ்ரேலை  உடனடியாக பிரிட்டன் அங்கீகரித்தது.  ஆனால் பாலத்தீனத்துக்கான அங்கீகாரம் இந்த சுமார் 75 ஆண்டுகாலமாக எட்டாக்கனியாகவே இருந்து வந்திருக்கிறது. 


காஸாவில் நடந்து வரும் பேரழிவு மேற்கு ஐரோப்பாவின் மனசாட்சியை கொஞ்சம் உலுக்கி,  பிரான்ஸையும்,  பிரிட்டனையும் பாலத்தீன அங்கீகாரம் குறித்து பேசவைத்திருக்கிறது. 

ஆனால் ஐ.நா மன்ற பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ என்ற வெட்டு ஓட்டை வைத்திருக்கும் ஐந்து வல்லரசுகளில் அமெரிக்கா இன்னும் தனது இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை மாற்றவில்லை.  


அமெரிக்காவின்  இஸ்ரேலிய ஆதரவு நிலைப்பாடும் மாறினால்தான் பாலத்தீனர்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.  

செப்டம்பரில் இந்த அறிவிப்பு ஐ.நா மன்றத்தில் வெளியிடப்பட்டால் அது இஸ்ரேல் சர்வதேச அளவில் மேலும் தனிமைப்படுத்தப்படுவதைத்தான் குறிக்கும்.  உள்நாட்டில் ஏற்கனவே இஸ்ரேலிய இடது சாரிகள் மற்றும் தாராள மனப்பான்மை கொண்ட யூதர்கள் மத்தியில் அதிருப்திக்கு ஆளாகியிருந்த நெத்னயாகுவின் அரசியல் எதிர்காலமும் அதன் பின்னர் மேலும் நெருக்கடிக்குள்ளாகலாம். 

மாறாக , “பயங்கரவாதத்துக்கு ஆதரவாக வெளிநாடுகளின் தலையீடு” என்று பிரசாரம் செய்து நெதன்யாகு தன் அரசியல் செல்வாக்கை அதிகரிக்கவும் முயற்சிக்கலாம். 

எது நடந்தாலும் தொடர்ச்சியாக பல தசாப்தங்களாக அனுபவித்த நாடற்ற நிலையிலிருந்து பாலத்தீனர்கள் மீள இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும் என்றே தோன்றுகிறது. 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மாலேகான்: `RSS தலைவர் மோகன் பகவத்தை கைதுசெய்ய சொன்னார்கள்' - தீவிரவாத தடுப்புப்பிரிவு மாஜி அதிகாரி

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகான் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் நேற்று தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவித்தது. இவ்வழக்கை ஆரம்பத்தில்... மேலும் பார்க்க

Tirunelveli Caste Killing : 'ஆணவக்கொலைகளை முதலமைச்சர் சீரியஸா எடுத்துக்கலை' - எம்.எல்.ஏ நாகை மாலி

திருநெல்வேலியில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் உடலை இன்னும் அவரின் குடும்பத்தினர் பெற்றுக்கொள்ளவில்லை. இன்று பெற்றுகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கொலை செய்த சுர்ஜித்தின் பெ... மேலும் பார்க்க

மாலேகான் குண்டுவெடிப்பு: `இது நீதியே அல்ல’ - BJP Ex எம்.பி உட்பட 7 பேர் விடுதலையை எதிர்க்கும் ஒவைசி

மகாராஷ்டிராவில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி மாலேகான் பகுதியிலுள்ள மசூதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், 6 பேர் உயிரிழந்தனர், 100-கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதுதொடர்பான விச... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலை: `எந்த அரசாங்கமாக இருந்தாலும் தயங்குகிறது’ - வலுக்கும் தனிச் சட்ட கோரிக்கை

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பா.ரஞ்சித், மாரி ... மேலும் பார்க்க

கொத்துக் கொத்தாகப் பறிபோகும் வேலை... இளைஞர்களின் எதிர்காலத்துக்கு பதில் என்ன ‘மாண்புமிகு’க்களே?

‘டி.சி.எஸ் 12,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளது’ என்று தற்போது சுழன்றுகொண்டிருக்கும் செய்தி, இந்திய ஐ.டி துறையிலும், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களின் மத்தியிலும் பெரும் அச்சத்தை உண்டாக்கி இருக... மேலும் பார்க்க

DMK கூட்டணி : மதிமுக -க்கு பதில் தேமுதிக - STALIN Plan?| TRUMP Tarrif MODI Imperfect Show 31.7.2025

* US Tariff: இந்தியா மீது 25% வரி விதித்த Trump; ரஷ்யாவிடம் எண்ணெய், ஆயுதம் வாங்குவதால் அபராதம்!* Trump Tariffs: நண்பன் இந்தியாவுக்கு 25% வரி - ட்ரம்ப் அறிவிப்பால் என்னென்ன பாதிப்புகள் வரும்?* மத்திய ... மேலும் பார்க்க