செய்திகள் :

உக்ரைனில் தொடரும் ரஷியாவின் தாக்குதலில் 8 பேர் பலி! 10 குழந்தைகள் உள்பட 82 பேர் படுகாயம்!

post image

உக்ரைன் தலைநகர் கீவ் மீது நள்ளிரவில் ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில், 6 வயது சிறுவன் உள்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீவ் நகரத்தின் மீது நேற்று (ஜூலை 30) நள்ளிரவு முதல் இன்று (ஜூலை 31) அதிகாலை வரை ரஷியா தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில், அங்குள்ள ஏராளமான குடியிருப்புக் கட்டடங்கள் இடிந்து சேதாரமானதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, 309 ஷாஹெத் மற்றும் டெகாய் ட்ரோன்கள் மூலமாகவும், 8 இஸ்காந்தர் ஏவுகணைகள் மூலமாகவும், ரஷியா தாக்குதல் நடத்த முற்பட்ட நிலையில், அவற்றில் 288 ட்ரோன்கள் மற்றும் 3 ஏவுகணைகளை உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு தகர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 21 ட்ரோன்கள் மற்றும் 5 ஏவுகணைகள் அதன் இலக்குகளைத் தாக்கியதில், 5 மாத குழந்தை உள்பட 10 குழந்தைகள் என மொத்தம் 82 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இத்துடன், ஏவுகணைத் தாக்குதலில் கீவ் நகரத்தில் அமைந்திருந்த 9 தளங்களைக் கொண்ட குடியிருப்புக் கட்டடம் ஒன்று முற்றிலும் தகர்ந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேபோல், ரஷியாவின் முக்கிய மாகாணங்களின் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்த முயன்ற 32 உக்ரைன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சீன தலைநகரில் கடும் வெள்ளம்: 80,000 பேர் வெளியேற்றம்! இருளில் மூழ்கிய 136 கிராமங்கள்!

Eight people, including a 6-year-old boy, were reportedly killed in Russia's midnight drone and missile attacks on the Ukrainian capital, Kiev.

இந்தியா உள்பட 69 நாடுகளுக்கு புதிய வரி: டிரம்ப் கையெழுத்து! யாருக்கு அதிகம்? குறைவு?

அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.இந்த உத்தரவு ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெ... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: கனடாவும் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.ஏற்கெனவே, இஸ்ரேல், அமெரிக்காவின் எதிா்ப்பையும் மீறி பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்போவதாக பிரான்ஸும், தங்களின் சில நிபந்தனை... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ் அதிபா் ஆக.4-இல் இந்தியா வருகை

பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்டினண்ட் ஆா்.மாா்கோஸ் ஜூனியா், ஆகஸ்ட் 4 முதல் 8 வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறாா்.இந்தப் பயணத்தின்போது குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்திக்கும் அவா், பிரதமா் நரேந்... மேலும் பார்க்க

ஈரானுடன் வா்த்தகம்: 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானுடன் வா்த்தகம் மேற்கொண்டுவரும் இந்தியாவைச் சோ்ந்த 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந் நாடு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.காஞ்சன் பாலிமா்ஸ், அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ரா... மேலும் பார்க்க

அமெரிக்கா-பாகிஸ்தான் வா்த்தக ஒப்பந்தம் இறுதி : டிரம்ப் அறிவிப்பு

‘பாகிஸ்தானுடன் அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இதன்படி, அந்நாட்டில் எண்ணெய் வளங்கள் மேம்படுத்தப்பட உள்ளன’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.மேலும், ‘இந்தியாவுக்கு பாக... மேலும் பார்க்க

அவசரநிலை வாபஸ்: மியான்மா் ராணுவம் அறிவிப்பு

மியான்மரில் நான்கரை ஆண்டுகளுக்கு முன்னா் ஆட்சியைக் கைப்பற்றியபோது அறிவித்திருந்த அவசரநிலையை திரும்பப் பெறுவதாக அந்த நாட்டு ராணுவம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில... மேலும் பார்க்க