செய்யறிவால் பறிபோகும் வேலை வாய்ப்புகளின் பட்டியல்! மைக்ரோசாஃப்ட் ஆய்வு
‘செத்த பொருளாதாரம்’.. கொன்றதே மோடிதான்! - ராகுல் காட்டம்
இந்தியாவின் செத்த பொருளாதார நிலைக்கு பிரதமர் மோடிதான் முதன்மைக் காரணம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷியாவுடன் இணைந்து வர்த்தகம் மேற்கொள்வதற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். மேலும், இந்தியாவுக்கான வரி விதிப்பு முறை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.
செத்த பொருளாதாரம்
இந்த நிலையில், இன்று தன்னுடைய ட்ரூத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில், ரஷியாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் அதுபற்றி எனக்குக் கவலையில்லை.
இந்தியா, ரஷியாவுடன் சேர்ந்து வர்த்தகம் செய்தால் வீழ்ந்து கிடக்கும் அவர்களது பொருளாதாரம் மேலும் வீழ்ந்துதான் போகும். இந்தியா, ரஷியா ஆகிய இரண்டு நாடுகளும் ‘செத்த பொருளாதார நாடுகள்’ என்றும் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிக்க : மோடி - டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை: காங்கிரஸ் விமரிசனம்
ராகுல் காந்தி கடும் விமர்சனம்
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய “செத்த பொருளாதாரம்” என்ற கருத்துக்கு எதிர்வினையாக, பிரதமர் மோடிதான் அந்த நிலைக்கு காரணம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் ஒரு பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது. அதைக் கொன்றது மோடிதான். தொழிலதிபர் அதானி - மோடி இடையிலான கூட்டணி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி, இந்திய ஒருமைப்பாட்டில் ஏற்பட்ட தோல்வி, சிறு, குறு தொழில்களை அழித்தது, விவசாயிகள் நசுக்கியது, வேலையில்லாமல் இளைஞர்களின் எதிர்காலத்தையும் மோடி அழித்துவிட்டார்” எனப் பதிவிட்டுள்ளார்.