சென்னை மெட்ரோவின் புதிய சாதனை! ஒரு மாதத்தில் ஒரு கோடி பயணிகள்!
மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - பாண்டிராஜ் கூட்டணி!
நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் பாண்டிராஜ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடிப்பில் வெளியான தலைவன் தலைவி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ரூ. 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது.
இக்கூட்டணிக்குக் கிடைத்த பாராட்டுகளால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், மீண்டும் விஜய் சேதுபதி இயக்குநர் பாண்டிராஜ் கூட்டணியில் புதிய படம் உருவாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தை லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் படத்திற்கான முன்தொகையை விஜய் சேதுபதி பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: லண்டன் வரை... கூலி புரமோஷன் தீவிரம்!