செய்திகள் :

Meghalaya Honeymoon Horror: திரைப்படமாகும் மேகாலயா தேனிலவு கொடூரம்!

post image

மேகாலயாவில் கடந்த மே மாதம் தேனிலவுக்கு சென்ற ராஜா ரகுவன்சியை அவரது மனைவி தனது காதலன் துணையோடு அடியாட்களை வைத்து கொலை செய்தார். இப்படுகொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்சி திருமணம் முடிந்த சில நாட்களில் தனது மனைவி சோனம் ரகுவன்சியுடன் மேகாலயாவிற்கு தேனிலவு சென்றார். அங்கு ராஜா ரகுவன்சியை சோனம் தனது அடியாட்கள் மூலம் கொலை செய்து பள்ளத்தில் தூக்கிப்போட்டார். சில நாட்கள் தலைமறைவாக இருந்த சோனம் உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.

அவரது காதலன் ராஜ் குஷ்வாஹாவும் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படுகொலை சம்பவத்தை இந்தியில் திரைப்படமாக எடுக்க இயக்குனர் எஸ்.பி.நிம்பவத் முடிவு செய்துள்ளார். படத்திற்கு ஷில்லாங்கில் தேனிலவு(Honeymoon in Shillong) என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை தயாரிக்க ராஜாவின் சகோதரர் சச்சினிடம் அனுமதி வாங்கி இருப்பதாக நிம்பவத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,''ராஜாவின் திருமணம், தேனிலவு கொலை, கைது போன்ற அம்சங்கங்கள் இடம் பெறும்.

இது போன்ற துரோக சம்பவங்கள் நிறுத்தப்படவேண்டும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கும் நோக்கில் இப்படம் தயாரிக்க இருக்கிறோம். படத்தின் 80 சதவீத பகுதி இந்தூரிலும், 20 சதவீத பகுதி மேகாலயாவிலும் படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம். படத்திற்கான கதை தயாராகிவிட்டது'' என்றார். இப்படத்திற்கு ஒப்புதல் கொடுத்துள்ள ராஜா ரகுவன்சியின் சகோதரர் சச்சின் இது குறித்து கூறுகையில்,''எங்களது சகோதரனின் மரணத்தை திரைக்கு கொண்டு வராவிட்டால் யார் மீது தவறு என்று தெரியாமல் போய்விடும். அதனால்தான் எங்களது சகோதரனின் மரணத்தை படமாக்க ஒப்புதல் கொடுத்திருக்கிறோம்'' என்றார்.

இது போன்று மற்றொரு சகோதரரான பிபின் இது குறித்து கூறுகையில்,''மேகாலயாவில் என்ன நடந்தது என்ற தகவல் படத்தில் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம்''என்று தெரிவித்தார்.

`நெல்லை கவின் ஆணவக்கொலை' - எவிடென்ஸ் அமைப்பு ஆய்வறிக்கை சொல்வதென்ன?

"நான்கு வெட்டுகளிலேயே கவினுக்கு உயிர் போயிருக்கிறது, கூலிப்படையினரைப்போல அவனது அரிவாள் வெட்டு இருந்திருக்கிறது. அப்படியென்றால் இது திட்டமிடப்பட்ட கூட்டாக சதி செய்த படுகொலையாகவே தெரிகிறது." என்று எவிடெ... மேலும் பார்க்க

தலைக்கேறிய மது போதை; இளைஞரைக் கொன்று எரித்த நண்பர்கள்... கோவையில் அதிர்ச்சி!

மதுரை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் சுரேஷ்குமார் (28). இவர் கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர்களான ரகுபதி (24), முத... மேலும் பார்க்க

சென்னை: ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு - சிசிடிவி-யைப் பார்த்ததும் அடையாளம் கண்ட போலீஸ்!

சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் ரோஸி (40) இவர், சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பணி முடிந்து நேற்று மாலை வீட்டுக்குச் செல்ல பெருங்குடி ரயில் நிலையத்தில் க... மேலும் பார்க்க

சென்னை: ஆட்டோ டிரைவர் கொலை - உறவினர் உட்பட 3 பேர் கைது!

சென்னை, தண்டையார்பேட்டை, கும்மாளம்மன் கோயில் தெருவில் வசித்தவர் அருண்மொழி (31). இவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். கடந்த 29.07.2025-ம் தேதி தண்டையார்பேட்டை, முண்ட கண்ணியம்மன் கோயில் அருகே அருண்மொழி நின்று... மேலும் பார்க்க

சென்னை கல்லூரி மாணவன் கார் ஏற்றி கொலை - திமுக பிரமுகர் தனசேகரனின் பேரன் கைது பின்னணி

சென்னை, அயனாவரம், முத்தம்மன் தெருவைச் சேர்ந்தவர், நித்தின் சாய் ( 20). இவர், மயிலாப்பூரில் உள்ள தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். இவரின் நண்பன், அயனாவரம் பி.இ., கோய... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா; எட்டி உதைத்துத் தள்ளிய பேத்திகள்; போக்சோ வழக்கில் முதியவருக்குச் சிறை

சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த பெண்ணுக்கு 19 வயதிலும் 11 வயதிலும் இரண்டு மகள்கள். கணவர் வெளிநாட்டில் வேலை செய்ததால் 74 வயதான மாமனாரும் அந்த வீட்டில் வசித்து வந்தார்.கைதுதினமும் ... மேலும் பார்க்க