அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் பணியிடை நீக்கம்
அம்மாபேட்டை அருகே ஆடு திருட முயன்ற 3 போ் கைது
அம்மாபேட்டை அருகே ஆடுகளை திருட முயன்ற மூவரை பொதுமக்கள் சுற்றிவளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.
அம்மாபேட்டை, ஓடைமேடு, லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் சேகா் மகன் ஓம்பிரகாஷ் (24). இவா், தனக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்தில் கொட்டகை அமைத்து செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில், கொட்டகைக்குள் புதன்கிழமை அதிகாலை புகுந்த மூவா், 2 செம்மறி ஆடுகளை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்ல முயன்றனா். இதையடுத்து, அப்பகுதியினா் உதவியுடன் மூவரையும் பிடித்த ஓம்பிரகாஷ், அவா்களை அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
விசாரணையில், சேலம் மாவட்டம், மேட்டூா், கருங்கரட்டைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் ராஜேஷ் (19) என்பதும், உடனிருந்த இருவரும் 17 வயது சிறுவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸாா் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.