சீன மழை வெள்ளம்: 44 போ் உயிரிழப்பு
சீனாவில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 44 போ் உயிரிழந்துள்ளனா்;
ஒன்பது போ் மாயமாகியுள்ளனா் என்று அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்கில் 80,000-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். மீயுன், யான்கிங் மாவட்டங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.